திருச்சி, செப். 21- திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியாரின் 146ஆவது (செப்.17) பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் பேரா.ப. சுப்ரமணியன் கழக கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர், மாவட்ட மகளிரணித் தலைவர் வ.குழந்தை தெரசா, மண்டல தலைவர் பா.ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் நா.தர்மராஜ், லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, செயலாளர் மணிவாசகம், லால்குடி ஒன்றிய துணைத் தலைவர் தம்பிசுரேஷ், செயலாளர் மார்ட்டின், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் முரளிதரன், பெரியார் பெருந்தொண்டர் முத்துசெழியன், இ.மா. தலைவர் வீ.அன்புராஜா, ப.க. ஆசிரியர் கழகம் மு.செல்வி, கூத்தூர் செல்வராஜ், பாபு, மண் ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆசைத்தம்பி, முருகேசன், பன்னீர்செல்வம், பாவேந்தர், பிச்சை அய்யா, பாச்சூர் அசோகன், ம.ந.த. முத்துசாமி, பாலச்சந்திரன், மாவட்ட ப.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், கழக காப்பாளர் பி.என்.ஆர். அரங்கநாயகி, புள்ளம்பாடி நகர செயலாளர் பொருட் செழியன், மா.இ.அ. வான் முடி வள்ளல், புள்ளம்பாடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் இசைவாணன், தமிழ்வாணன், மோகன், மாணவர் கழகத் துணை செயலாளர் சித்தார்த்தன், இ.மா.து.செயலாளர் சி.வீரமணி மற்றும் லால்குடி, மண் ணச்சநல்லூர், புள்ளம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த கழகத் தோழர்கள் 4 வேன் களில் வந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இளைஞரணித் தோழர்கள் இருசக்கர வாகனங்களிலும் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து மகளிர் அணி யினர், பெரியார் பிஞ்சுகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.
மேலும் லால்குடி கழக மாவட்டம் முழுவதும் 75 இடங்களில் கொடி ஏற்றி, 12 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.