அதிகரிப்பு
கடந்த சில நாள்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1ஆம் தேதி 13,709 மெகாவாட்டாக இருந்த தினசரி மின்தேவை தற்போது 17,974 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
உத்தரவு
சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அதை அனைத்து மாநில காவல்துறையும் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் கண்காட்சி
சென்னை அறிவியல் விழாவை வருகிற 24ஆம் தேதி பகல் 1.30 மணியளவில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி துவக்கி வைக்கிறார். விழா 26ஆம் தேதி வரை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மய்ய (பிர்லா கோளரங்கம்) வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்காக நடைபெறும்.
ரேகை கருவி
போலி பத்திரப் பதிவை தடுக்கும் நோக்கில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமிக்க கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி பயன்படுத்தப்படும் என பதிவுத் துறை அதிகாரிகள் தகவல்.
பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து குரூப் ஏ கால பணியிடத்தை மேலும் அதிகரிப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளிவரும் என்ற தகவல் வெளியாகின்றன.
மின்னுற்பத்தி
சென்னையில் உள்ள கூவம், அடையாறு ஆகிய சிறிய ஆறுகளில் சிறு புனல் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்த சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தகவல்.