கழகக் களத்தில்…!

4 Min Read

21.09.2024 சனிக்கிழமை
பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்படப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழா!

சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் * நிகழ்ச்சி நிரல்: மாலை 5 மணிக்கு குறும்படங்கள் திரையிடல். மாலை 6 மணிக்கு விருது வழங்கும் விழா * தலைமை: மாரி கருணாநிதி (பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: ஒளிப்படக் கலைஞர் சீனி முத்து ராஜேசன் * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் – பகுத்தறிவாளர் கழகம்), முருகேசன் (பகுத்தறிவாளர் கழகம் ஊடகத்துறை மாநிலச் செயலாளர்) * விருது வழங்கி சிறப்புரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * பரிசு வழங்கி பாராட்டுரை: மங்கை அரிராஜன் (தலைவர் – தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்) * வாழ்த்துரை: உடுமலை வடிவேல் (பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை) * நன்றியுரை: பேராசிரியர் ம.மாறவர்மன் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு கலைத்துறை)

22.9.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் பெருந்தொண்டர்
வலசை அரங்கநாதன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
வலசக்காடு: காலை 10.00 மணி * இடம்: அர.வீரமணி இல்லம், வலசக்காடு * தலைமை: தங்க.நாகரத்தினம் (திமுக) * படத்திறப்பாளர்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்) * நினைவேந்தல் உரை: துரை.கி.சரவணன் (திமுக), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: என்.இராஜேந்திரன்.

சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு
காஞ்சிபுரம்: காலை 10.00 மணி * இடம்: சாய் சண்முகம் பார்ட்டி ஹால், மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை: அ.ரேவதி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி குழுவினர் * மந்திரமா? தந்திரமா?: திருத்தணி தமிழ்முரசு வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி * நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை: க.செல்வம் (காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்) * சிறப்புரை: சி.வி.எம்.பி. எழிலரசன் (காஞ்சி சட்டமன்ற உறுப்பினர், திமுக), மகாலட்சுமி யுவராஜ் (மாநகர மேயர்), சி.கே.வி.தமிழ்ச்செல்வன் (திமுக), வழக்குரைஞர் ஜெஸ்ஸி (மக்கள் மன்றம்), சாரதா தேவி (திராவிடர் இயக்க தமிழர் பேரவை) * நன்றியுரை: ராஜலட்சுமி மோகன் * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்
திருவாரூர்: மாலை 6.00 மணி * இடம்: தெற்கு வீதி, திருவாரூர் * வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுபபினர்), உ.மதிவாணன் (திமுக) * தொடக்கவுரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – ஆவடி மாவட்டத்தில் கழக கொடியேற்றல்

ஆவடி: காலை 7 மணி முதல் மாலை 8.00 மணி வரை * இடம்: ஆவடி பெரியார் மாளிகை முதல் கொரட்டூர் பேருந்து நிலையம் வரை *தலைமை: வெ.கார்வேந்தன் (மா. தலைவர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.ஏழுமலை (விழாக் குழுத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மனநல ஆலோசகர் இரா.அன்புமதி * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆவடி மாவட்டம்

26.09.2024 வியாழக்கிழமை
காரைக்குடி மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 5.00 மணி *இடம்: குறள் அரங்கம், (தரைத் தளம்), சண்முக ராசா சாலை, காரைக்குடி * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்)* வரவேற்புரை: கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா பரப்புரை கூட்டங்கள், அமைப்புப் பணிகள், வரவு – செலவு அறிக்கை * நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்) * விழைவு: தோழர்களின் தவறாத வருகை! * b: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *b: காரைக்குடி கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *