சென்னை,செப்.21- பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமதி. வானதி
சீனிவாசன் அவர்களே!
ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே கட்ட தேர்தலுக்கு வந்து வழக்காடுகிறீர்கள்.
பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.
குடியரசுத் தலைவர் ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜகவின் தீய எண்ணத்தை இந்தியா முறியடிக்கும்.
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கும் பட்டருக்கும் வழி சொல்ல முடியலை!
இதில் ஒரே நாடு ஒரே தேர்தலா?
வானதிக்கு வெங்கடேசன் எம்.பி. கேள்வி
சென்னை,செப்.21- பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமதி. வானதி சீனிவாசன் அவர்களே!
ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே கட்ட தேர்தலுக்கு வந்து வழக்காடுகிறீர்கள்.
பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.
குடியரசுத் தலைவர் ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜகவின் தீய எண்ணத்தை இந்தியா முறியடிக்கும்.
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.