அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஆக.5-“மோடி ஆட்சியில் நாட் டில் வேலையில்லா திண் டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவின் இளைஞர்கள் இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்” என்று அகில இந் திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-
மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சத்து 20 ஆயிரம் வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 லட்சத்து 44 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங் கள் அனைத்தும் ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி என்ன ஆனது?
இந்த வாக்குறுதிப்படி கடந்த 9 ஆண்டு களில் 18 கோடி வேலை வாய்ப்புகள் உருவா கியிருக்க வேண்டுமே? நாட்டின் இளைஞர் கள் இருண்ட எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தெருக் களில் கோபமும், வன்முறையும் நிலவுவதில் ஆச்சரியமில்லை.
வேலைவாய்ப்பை வழங்குவதில் பா.ஜ.க. அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. கற் பனை கூட செய்ய முடியாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், வலிமிகுந்த விலைவாசி உயர்வு மற்றும் பா.ஜ.கவால் தூண்டிவிடப்பட்டவெறுப்பு ஆகியவை தான் இத்தகைய பேரழிவுக்கு காரணம். ஏழை மற்றும் நடுத்தர வாழ்வதற்கு, மக்கள் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.
இவ்வாறு அப்பதிவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.