கேள்வி 1: “திராவிடப் பாதையில் விஜய் போவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல” என்று பாஜகவினர் பதறுகின்றனரே?
– மா.திராவிட முரசு, நுங்கம்பாக்கம்
பதில் 1: திராவிடப் பாதையில் பயணிப்போர் எப்போதும் விஜய் அவர்களை திராவிடக் குடும்பத்தில் கலைப் பிரிவில் முத்திரை பதித்தவராகவே பார்த்து வருபவர்கள். ஆனால், பா.ஜ.க. காவிகளோ, அவரை ஜோசப் ஆகவே மட்டுமே பார்க்கும் காமாலைக் கண்ணர்கள். அவர்கள் பார்வை வேறு எப்படி இருக்கும்?
– – – – –
கேள்வி 2: நாங்கள் நூற்றாண்டு என்று தம்பட்டம் அடித்து கொண்டாடுவதில்லை… எல்லா ஆண்டும் எங்களுக்கு நூற்றாண்டுதான் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதே?
– .கி.சாக்கியமுனி, மதுரை
பதில் 2: வரலாறு இல்லாத வந்தேறிக் கூட்டத்தின் வாய்ப்பறை அது! பின் ஏன் 100 ஆவது ஆண்டில் இலக்குகளை நிர்ணயிக்கின்றனர்?
இதிலும்கூட இரட்டை வேடம், இரட்டை நாக்கா?
– – – – –
கேள்வி 3: “ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் போல் ராகுலையும் கொலை செய்வோம்” என்று பாஜகவினர் கூறும் அளவிற்கு அவர்கள் உள்ளத்தில் வெறுப்பை விதைத்தது யார்?
– .அற.ஆதிமூலன், நெல்லை
பதில் 3: இத்தகைய பேச்சினை பிரதமரும், உள்துறை அமைச்சரும் கண்டு ரசிக்கி்ன்றவர்கள் போன்று இருக்கலாமா? அது ஓர் அரசின் கடமையாகுமா?
ராகுல் ஒரு துணிவு மிக்க போர்த் தளபதி – பொருட்படுத்தமாட்டார் இந்தப் பூச்சாண்டிகளை!
– – – – –
கேள்வி 4: டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது அரியானா தேர்தலுக்காகவா?
– வெ.தமிழமுதன், திண்டிவனம்
பதில் 4: கெஜ்ரிவால் பலே அரசியல் கில்லாடி, உயர்ஜாதி தந்திரங்கள் அவருக்கு அத்துபடி! அதனால்தான், இந்த பஞ்சதந்திர வகையறா?
– – – – –
கேள்வி 5: இசுரேலின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பக்கத்து நாட்டில் உள்ளவர்கள் பயன்படுத்தும் அலைத்தகவல் (பேஜர்) சாதனத்தை வெடிக்க வைத்துள்ளார்களே? உலக நாடுகள் இதைக் கண்டிக்காவிட்டால் நாளை இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் அலைபேசிகளையே கொல்லும் ஆயுதமாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்படாதா?
– கலை.காளிதாசன், தாம்பரம்
பதில் 5: நிச்சயமாக! இதனை உலகம் – உலக மக்கள் கண்டித்து, முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்
– – – – –
கேள்வி 6: மதுவிலக்கு குறித்து பல்வேறு குழப்பங்கள் அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறதே – இதுபற்றி தங்கள் கருத்து?
– முருகேசன், மூணாறு
பதில் 6: அரசியல் கட்சிகளின் ஓட்டு வேட்டை ஆவலில் இதுபோன்று நிகழ்வுகள் சகஜமே!
– – – – –
கேள்வி 7: அவநம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்குமான வேறுபாடு?
– குமார், சேலம்
பதில் 7: அவநம்பிக்கை – சந்தேகத்தினால் ஏற்படும். மூடநம்பிக்கை – முட்டாள்தன பிடிவாதத்தினால் ஏற்படுவது!
மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைத் தகர்த்து எறியக் கூடியவை.
அவநம்பிக்கையை தன்னம்பிக்கையால் அகற்றுவது அவ்வளவு எளிதல்ல!
– – – – –
கேள்வி 8: பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக மக்களும், அரசியல் கட்சியினரும் மீண்டும் போராடுவார்களா?
– நா.விசுவா, திருத்தணி
பதில் 8: போராட வேண்டியது அவர்களது உரிமை! காலத்தின் தேவையாக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் மைனாரிட்டி பா.ஜ.க. அரசினால்!
– – – – –
கேள்வி 9: பார்ப்பனர்் முதல் பல ஜாதி பெண்களும் இப்போது மறுமணம், ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்கள், வரதட்சணையின்றி நடப்பதற்கு பத்திரிகையில் விளம்பரங்கள் ஏராளம் வருகிறதே இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கல.சங்கத்தமிழன், காஞ்சி
பதில் 9: தன்னலம் எப்படி குடை விரித்தாலும், விளைவு இதுதான் என்பதால், வரவேற்பு கூறுவது நியாயமான ஒன்றாகும்!
– – – – –
கேள்வி 10: பங்குச் சந்தை சித்ரா விடயமும், மாதபி புச் விடயமும் போல பல கோடி ரூபாய் ஊழல் நிகழ்வுகளுக்கு கொஞ்சம்கூட தயக்கமும் பயமுமின்றி உண்மையற்ற பதில் கூறுகின்றனரே பிஜேபியினர்?
– சங்கவி, உத்திரமேரூர்
பதில் 10: ஆனால், அவர்கள் பிரச்சினைகளை மறைத்தோ, மறந்தோ, திசை திருப்புவதில் சரியான அரசியல்காரர்களாயிற்றே!
அதனால் இது அவர்கள் ஆட்சியில் எதிர்பார்க்க வேண்டியதே!