ஈராயிரம் ஆண்டுகளாக சகித்துக் கொண்டார்கள். 78 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை அரைகுறையாக சுவாசிப்பதைக் கூட ஹிந்துத்துவம் விரும்பவில்லை.
அப்படி என்ன தடைகள் – இதோ பட்டியல்:
“தனது கால் தடத்தைத் தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்பக் கழுத்தில் கலையம்.
பொதுக்கிணற்றில் நீர் எடுக்கத் தடை.
சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை.
குளங்களில் குளிக்கத் தடை.
எண்ணெய் வாங்கத் தடை – திருவாங்கூர் சமஸ்தானத்தில் சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் கடைகளுக்குச் சென்று எண்ணெய் வாங்கக் கூடாது.
அவர்கள் இறந்த மாட்டின் கொழுப்பை பயன்படுத்துவாக்ள். இதனால் அவர்கள் வாழும் பகுதிகளில் மிகவும் கெட்ட வாடை அடிக்கும்.
ஆடைகளை வாங்கக் கூடாது. இறந்தவர்களின் உடலில் இருந்து அகற்றப்பட்ட ஆடைகளை ஏலமிட்டு அதைத்தான் வாங்கி அணிய வேண்டும்.
இன்றும் உத்தரப் பிரதேச கிராமங்களில் குறிப்பிட்ட சில சமூகங்கள் வீட்டிற்கு கதவுகள் வைக்கக் கூடாது. தகரம் அல்லது முட்களாலான தட்டி அல்லது உடைந்த பலகைகளை வைத்துதான் வாசலை அடைக்க வேண்டும்.
தெருக்களை பயன்படுத்தத் தடை.
மேற்சட்டை, வேட்டி, துண்டு அணியத் தடை.
மீசை வைக்கத் தடை.
தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை.
செருப்பு அணியத் தடை.
குடுமி, கடுக்கன் போடத் தடை.
ரயிலில் பயணிக்கத் தடை.
பேருந்துகளில் உட்காரத் தடை.
பாடசாலையில் படிக்கத் தடை.
கோவிலுக்குள் நுழையத் தடை.
பொது நிறுவனங்களில் உட்புகத் தடை.
மருத்துவ வசதிக்குத் தடை.
விரும்பியபடி உழைக்கத் தடை.
சதுர வடிவ வீடு கட்டத் தடை.
ஜன்னல் வைக்கத் தடை.
திண்ணை கட்டத் தடை.
வாசக்கால் கதவுக்குத் தடை.
தென்னையோலையால் கூரை வேயத் தடை.
கிணறு தோண்டிக் கொள்ளத் தடை.
ஆடு, மாடு வளர்க்கத் தடை.
மா, பலா, வாழை வளர்க்கத் தடை.
முகம் பார்க்க கண்ணாடி வைத்துக் கொள்ளத் தடை.
சொந்த ஏர் கலப்பை சாலுக்குத் தடை.
அம்மி, ஆட்டுக்கல், யந்திரம் வைத்துக்கொள்ளத் தடை.
தேங்காய் நார் கயிறு பயன்படுத்தத் தடை.
வீடு கட்ட செங்கல், கருங்கல் உபயோகிக்கத் தடை.
உலோக பாத்திரங்கள் வைத்துக் கொள்ளத் தடை.
மண்வெட்டி, கடப்பாரை சொந்தமாக வைத்துக் கொள்ளத் தடை என்று ஏராளமான தடைகள்.
இவையெல்லாம் இந்த மண்ணில் பல சமூகங்கள் அனுபவிக்கக் காரணமே இங்கிருந்த மனுதர்ம ஆட்சி முறைகளும் பழக்க வழக்க சட்டங்களும்தான்!
இத்தனை தடைகளையும் ஒரு சமூகம் ஜாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமை உலகில் எங்கேனும் உண்டா??
78 ஆண்டுகால அரசமைப்புச் சட்டத்தை உயர் ஜாதியினரால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
2000 ஆண்டுகால மனுதர்ம கொடுங்கோல் ஆட்சி முறைகள் சாமானியர்கள் மீது திணிக்கப்பட்டது.
தமிழ் மன்னர்கள் காலத்தில் குறிப்பாக சோழர்களின் காலத்திலே, உழைக்கும் மக்கள் மிக கொடிய வறுமையில் வாழ்ந்துள்ளனர்.
எளிய மக்கள் தங்களைத் தாங்களே சில கோயில்களுக்கு அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளனர்.
உணவுக்கே வழி இல்லாத மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அடிமைகளாக கோயில்களுக்கு தங்களை விற்றுக் கொண்டனர்.
இராஜாதிராஜன் குலோத்துங்க சோழன் இருவரது காலத்திலும் அடிமைகள் விலைகக்கு வாங்கப்பட்டுள்ளனர். அது குறித்த கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையாலே வெளியிடப்பட்டுள்ளது.