புதுச்சேரி, ஆக. 5- புதுச்சேரியில் இள நிலை மருத்துவப் படிப்பில் உயர் ஜாதி ஏழைகளுக்கு (EWS) ஆண் டுக்கு எட்டு லட்சம் வருமானம் பெறும் புளி ஏப்பக்காரனுக்கு கட் ஆப் மார்க் 127 என்ற சமூக அநீதியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சென்டாக்கில் நடக்கும் அநீதி!
நீட் , எம்பிபிஎஸ் தகுதிக்கு எம்.பி.சி. மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் 437, எஸ். சி. மாண வர்களுக்கு கட் ஆப் மார்க். 235 , ஆனால் அரிய வகை ஏழைகளான (EWS) பார்ப்பன மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் வெறும் 127. இதனைப் போன்றே அண்மையில் நடைபெற்ற மேல்நிலை எழுத்தர் பணி நியமனம் மற்றும் காவலர்கள் தேர்வுப் பணிகளிலும் தொடர்ந்து சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் புதுவை அரசு மற்றும் ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் கண் டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழக சார்பில் 4.8.2023 மாலை 5 மணிக்கு புதுச்சேரி அறிஞர் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளர் கி. அறிவழகன் வர வேற்புரை நிகழ்த்தினார். மாவட் டத் திராவிடர் கழக தலைவர். வே. அன்பரசன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி ஆர்ப் பாட்டத்தின் நோக்கங்களை எடுத் துரைத்து தொடக்கவுரை ஆற்றி னார்.
ஆர்ப்பாட்டத்தில் புதுச் சேரியில் செயல்படும் பெரியாரியல் மற்றும் சமூக நல அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். புதுச் சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பி. பிர காஷ்,செயலாளர் கே.இராசா, புதுச்சேரி மனித நேய மக்கள் கட்சி பொறுப்பாளர். முகமது ஆகியோர் கள் கண்டன உரை நிகழ்த்தினார் கள். இறுதியாக புதுச்சேரி விடு தலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்வலர்கள்
புரட்சிக் கவிஞரின் பெயரன் கோ. செல்வம், புதுவை சிவம் மகன். முனைவர் சிவ. இளங்கோ, இள. கோவலன், புதுச்சேரி தமிழ் எழுத் தாளர் கழகச் செயலாளர் தமிழ் நெஞ்சன், மே 17 இயக்க புதுச்சேரி தலைவர் விஜயகுமார், தலித் மக் கள் பாதுகாப்பு இயக்க தோழர்கள் பிரியா, ரோசி, பிரவீனா, கலை மாமணி பி. வி. மாணிக்கம், பாகூர் மணிமாறன் ஆகியோர்கள் பங் கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி , புதுச்சேரி நகராட்சி தெற்கு தலைவர் மு.ஆறு முகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன், உழவர்கரை நக ராட்சி கிழக்கு தலைவர் சு. துளசி ராமன், திராவிடர் கழக தொழி லாளரணி செயலாளர் கே. குமார், அரியாங்குப்பம் கொம்யூன் தலை வர் செ. இளங்கோவன், செயலாளர் இரா. ஆதிநாராயணன், பாகூர் கொம்யூன் தலைவர் இராம.சேகர், விடுதலை வாசகர் வட்டச் செயலா ளர் ஆ. சிவராசன் தோழர்கள் துரை சிவாஜி, சா. முகேஷ், இரா.ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப் பாட்டம் நடைபெற்ற பகுதியில் காலையிலேயே கழகக் கொடிகள் மற்றும் பதாகைகள் திராவிடர் கழக இளைஞரிணித் தலைவர் தி.இராசா ஏற்பாட்டில் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.