20.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு, நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒன்றிய அரசு இத்தகைய திசைதிருப்பல் உத்தியை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண் டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* செப்டம்பர் 25இல் பிரதமரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி அளிக்க வலியுறுத்துவார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு: உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் மகாதலித்களின் வீடுகளுக்கு தீ வைக்கப் பட்டது குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் நிதிஷ் குமார் மவுனம்: ராகுல் காந்தி, தேஜஸ்வி கடும் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ் ஆசிரியர்களுக்கான அய்சிசிஆர் பணி நியமனத்தில் ஹிந்தி திணிப்புக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம். தமிழ் மொழி ஆசிரியர் பணி நியமனத்தில், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதாக குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா