கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படி சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளும் நிலையில் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதின்றி – தன் கட்சிக்காக என்று நீதியையும், நேர்மையையும் கைவிடுகிறதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலன்றி ஒழுக்கத்திற்குரியதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’