திருச்சி, நவ.27 முசிறி சட்ட மன்ற தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாமில் 1332 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகு தியில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கம் வரை திருத்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நேற்று நடைபெற்றது. இம் முகாமில் பெயர் சேர்க்க படிவம் 6ல் 732 விண்ணப்பங்களும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ல் 152 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ல் 448 விண்ணப் பங்களும் சேர்த்து மொத்தம் 1332 விண்ணப்பங்கள் பெறப் பட்டது. வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது விண்ணப்ப மனுக்களைகொடுத்து வாக்காளர் பட் டியலில் தங்கள் பெயர் முறையாக வருவதற் கான வழிமுறைகளை மேற் கொண்டனர்.
முகாமினை வட்டாட்சி யர்கள் பாத்திமா சகாயராஜ், கண்ணாமணி தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கார்த்திக் மற்றும் செல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.