இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை

viduthalai
3 Min Read

ஒட்டுமொத்தமான உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம்
தனிநபர் வருமானத்திலும் வளர்ச்சி
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை

சென்னை, செப்.20- ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோன்று. தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

ஒருநாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது ஜி.டி.பி. எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் முதலிடத் இல் அமெரிக்கா உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தை அதிகரிப் பதற்கான அனைத்து முயற்சிக ளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநிலங்களின் உற்பத்தி அடிப்ப டையில்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

30 சதவீத பங்களிப்பு

ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி, உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 1961-ஆம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்பட்டு ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-2024-ஆம் நிதி யாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக எப்படி உள்ளது? என்ற விவரங்களை பிரதமருக் கான பொருளாதார ஆலோச னைக்குழு உறுப்பினர்களான சஞ்சீவ் சன்யால் (பொருளாதார மேதை), ஆகன்க்ஷா அரோரா (நிதி ஆயோக்துணை இயக்குநர்) ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு இந்த மாதம் (செப் டம்பர்) ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது.
2023-2024-ஆம் நிதியாண்டில் இந் தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் அளித்துள் ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

3-ஆவது இடத்தில் தமிழ்நாடு

தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில் தேசியசராச ரியை ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் ஓட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தி யாவில் உள்ள மாநிலங்களில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

மராட்டிய மாநிலம் 13.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 9.7 சதவீ தத்துடன் 2-வது இடத்திலும், தமிழகம் 8.9 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் இருக்கிறது. 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்க ளிப்பு பெரிய அளவில் இல்லை. கவலை அளிப்பதாக உள்ளது

1991-ஆம் ஆண்டு கொண்டுவ ரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஒட்டுமொத்த மாநிலங்களும் சராசரி வளர்ச்சியை எட்டிய போதிலும், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பின்னடைவை சந்தித்து உள்ளது. அதாவது, 1961-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டு மொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது தென்மாநிலங்கள், மராட்டியம், குஜராத் உள் ளிட்ட மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. வட மாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேகமான வளர்ச்சி

இந்த அறிக்கை தொடர்பாக பொருளாதார பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘இந்தியா வில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வேக மாக வளர்ந்து வருகிறது.
பீகார், உத்தரப்பிரதேசம், ஜார் கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தனிநபர் வருமானம் மிக குறைவாக இருப்ப தால் இம்மாநிலங்களை சேர்ந்த வர்கள் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள தென்மாநிலங்களை நோக்கி வருகிறார்கள்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *