மற்றொருவர் யார்?

1 Min Read

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பலபேருள்
பாலகங் காதர்க்கு பார்ப்பனியம் பெருவிருப்பு
மூதறிஞர் இராசாசி நால்வருணம் வேண்டுபவர்
சேரன்மா தேவியில்நம் வ.வேசு. நெறிபிறழ்ந்தார்
கோக லேக்குப்பின் தலைமை ஏற்ற
காந்தி யாரும் வைக்கத்தில் வலுவிழந்தார்
அம்பேத்கர் அண்ணலோ தம்மபதம் போய்ச் சேர்ந்தார்;
தம் மக்கள் உய்வு பெற தமதுழைப்பைத் தந்து பின்னே
சூழ்நிலையால் தடம்மாறி இடறியவர் பலருள்ளும்
சூழ்ச்சிவலைப் பின்னலினால் சிக்குண்டு தவித்திட்ட
மக்கள் தமைக் காத்திடவே மனமுவந்து ஓடிவந்தே
மானமும் அறிவி(வ்)ரண்டும் மனிதர்க்கு அழகென்று
வாழ்நிலை காட்டிஒரு வழியமைதை்து முன்னடந்து
அறிவென்னும் ஆயுதத்தால் அவிழ்த்தெறிந்தும் அறுத்தெறிந்தும்
கடைசிவரை கலங்காமல் கைபிடித்துச் சிக்கவிழ்த்து
கரைசேர்த்த எங்களய்யா கருஞ்சட்டைப் பெரியாரே
நற்றமிழர் கொள்கையை நடைமுறைப் படுத்திய
சொற்புடைய தலைவரும்நம் பெரியாரே! மற்றெவர் யார்?
புலவர் உ.தேவதாசு,
சென்னை –600 053

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண