வேதாரண்யம், ஆக.5- நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றிய, நகர கலந்துரை யாடல் கூட்டம் 3.8.2023 அன்று காலை 11 மணி அளவில் வேதாரண்யம் தமிழ் தென்றல் அலுவலகத்தில் நடை பெற்றது.
வேதை ஒன்றிய தலைவர் தெ.ஆறு முகம் தலைமை ஏற்று உரையாற்றினார். அண்டர் காடு மு.அய்யப்பன் வரவேற்று உரையாற்றி னார். கழகக் காப்பாளர் கி.முருகையன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலை வர் சு.புயல்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள்.
தலைமைக் கழக அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி அவரது உரையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் 32 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து ஊர்களிலும் கிளைக் கழகங்கள் அமைக்க வேண்டும், அமைத்து கழகக் கொடிகள் வரும் செப்டம்பர் மாதம் 17 அய்யா பிறந்தநாள் அன்று கொடி ஏற்றப்பட வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளை முதலில் உறுப்பினர் சேர்க்கை ஒன்றியத்தில் குறைந்த பட்சம் 100 உறுப் பினர்கள் சேர்ப்பதற்கான பணி களை செய்ய வேண்டும் அதற்கு முழு பொறுப்பாக இன்று ஒன்றிய துணைத் தலைவராக பொறுப்பேற்கும் தம்பி மு.அய்யப்பன் சிறப்புடன் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து நமது பணி அண்டர்காடு கிராமத்தில் திரா விடர் கழக உறுப்பினராக சேர வேண்டியது ஏன்? என்ற விளக்க தெரு முனைப் பரப்புரை கூட்டமும், திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஆயக்காரன்புலம் அல்லது வேதாரண் யத்தில் வரும் காலங்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உங்களுக்கு முழு ஒத்துழைப்பாக ஒன்றிய தலைவர் தெ.ஆறு முகம், ஒன்றிய செயலாளர் சி.பஞ்சாபகேசன் இருப்பார்கள். பழையபடி அண்டர்காடு கருப்பு சட்டை கோட்டையாக மாற வேண்டும் என்றும் இளைஞர்களை மாணவர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கு உடன் செயல்பாடு களை மேற்கொள்ள வேண்டும் என்று உரை நிகழ்த்தினார். நிகழ்வில் மு.கமல், ப.இனி யவன், செ.அபினாஷ், நா.முகேஷ்.
வேதை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத் தில், ஆயக்காரன்புலம் சா.சிங்காரவேலு, அண்டர்காடு கி. பன்னீர் செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தும், தந்தை பெரியார் மனித உரிமைப் போர் நடத்திய வைக்கம் நூற்றாண்டு விழா. நீதி கட்சி நூற் றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா. வேதை ஒன்றியத் தில் வெகு விமரிசையாக தெருமுனைப் பிரச் சாரம் நடத்துவது எனவும், அனைத்து பகுதி களிலும் 100 புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிப்பது எனவும், தலைமை பொதுக்குழு தீர்மானங்களை நிறை வேற்றுதல் எனவும், ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை வேதை அல்லது ஆயக்காரன்புலத்தில் நடத்துவது எனவும், பயிற்சிப் பட்டறைக்கு வேதை ஒன்றியம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளையும் பங்கேற்க செய்வது எனவும், செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை வேதை ஒன்றியம் கிளைக் கழக வாரியாக கோலாகலமாக நடத்துவது எனவும், விடுதலை சந்தாக்களை புதுப்பித்து சந்தாக் களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
நிறைவாக ப.இனியவன் நன்றி கூறினார்.