திருச்சி, ஆக. 5- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப் புக் கொடை குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி 3.8.2023 அன்று முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலை மையில் நடைபெற்றது.
பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. பி. மஞ்சுளா வாணி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ் மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்த இந்நிகழ்ச் சியில் மாணவர்கள் உடல் உறுப்புக்கொடை குறித்த உறுதிமொழியினை ஏற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் உறுப்புக் கொடை குறித்த விழிப்பு ணர்வும் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட் டத்தால் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந் நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர் பேரா. அ. ஜெசிமா பேகம் சிறப்பாக ஒருங்கி ணைத்திருந்தார்.