சென்னை,செப்.17- சென்னையில் நேற்று (16.9.2024) நடைபெற்ற நாடார் சங்கக் கட்டட திறப்பு விழாவில் திமுக நாடாளுமன்றக்குழுத்தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பேசியபோது, “தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி படித்துக்கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும் தனியாகத் தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்து எங்கள் பெயருக்குப் பின்னால் எங்கள் தந்தை பெயரோடு நிறுத்திக் கொண்டோம். உங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி வெளிப்படையாக உள்ளது என்றார்.
“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் ஜாதி, மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் சமமானவர்கள். நாம் எல்லாரும் உழைப்பை நம்பக்கூடியவர்கள். அதனால் இப்படி ஜாதிப் பெயரைப் போட வேண்டாம்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.
சமூக வலைத்தளத்ததில்…
தந்தைபெரியார் பிறந்த நாளில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. சமூகவலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“It is the duty of every citizen to develop a scientific temper, humanism, and the spirit of inquiry and reform.” – The Constitution of India
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்.
-இவ்வாறு அப்பதிவில் கனிமொழி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.