தேஜஸ்வி வாழ்த்துச் செய்தி
பீகார் மேனாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பீகார் மாநில எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி, தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
ஹிந்தியில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்
பகுத்தறிவு, அறிவியல் அணுகுமுறை, மக்கள் உரிமைகள், சுயமரியாதை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த சமத்துவம் மற்றும் அடக்குமுறையில் இருந்து சாமான்ய மக்கள் விடுதலை பெறுவதற்கான புரட்சிக்கான மாபெரும் ஆதரவாளர், புரட்சியாளர் மற்றும் வாழ்நாள் முழுவதும் மத மூடநம்பிக்கைகள், போலித்தனம், சடங்குகள், ஜாதியம், வர்ணாசிரம முறை மற்றும் பெண்கள் மீதான சமூக அடக்குமுறைகளை கடுமையாக எதிர்த்த மாபெரும் சிந்தனையாளரும் சமூக புரட்சியாளருமான மதிப்பிற்குரிய ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் கோடானுகோடி வணக்கங்கள்.