கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, வள்ளலார் ஞானாலயத்தில் 5.8.2023 அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 70 மாணவர்களுடன் தொடங்கியது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.இராமலிங்கம் தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் – “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு – “பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு” என்ற தலைப்பில் இரண்டாவது வகுப்பெடுத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
70 மாணவர்களுடன் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
Leave a Comment