நீலகிரி, செப்.16 உதகை அருகே தலைகுந்தா பகுதியில் இரண்டு குட்டிகளுடன் கோயிலுக்குள் நுழைந்த கரடியின் காட்சிப் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்த கரடி பூஜை பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் கரடி நடமாட்டம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.