மயிலாடுதுறை, செப். 16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் 13.9.2024 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கழக காப்பா ளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வர வேற்று கூட்டத்தின் நோக் கத்தினை எடுத்துரைத்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மயிலாடுதுறை நகர திராவிடர் கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க வீரபாண்டியன் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மாணவ – மாணவியரி டையே ஆன்மிகம் என்ற பெயரில் தவறான கருத் துக்களை பரப்பிய மகாவிஷ்ணு என்ற நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முத லமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மயிலாடுதுறை மாவட் டத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை செப்டம்பர் 17 அன்று தோழமை அமைப்புக ளுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
கலந்துரையாடல் கூட்டத்தில் நகர தலைவர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் கடவாசல் ச.சந்திரசேகரன், செயலாளர் ப.செல்வம், கொள்ளிடம் ஒன் றிய தலைவர் பி. பாண்டியன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், துணைச் செயலாளர் டி.சபாபதி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கு.இளஞ்செழியன், கொக்கூர் கலைக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், நகர துணைத் தலைவர் அரங்க புத்தன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஜெகன்.சாமிக்கண்ணு மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார்.