பிள்ளையார் காப்பாற்றவில்லையே!
எப்போதோ யாரோ தாராபுரம் அரசு மருத்துவமனை அரச மரத்துக்கு அடியில் ஒரு பிள்ளையார் பொம்மையை வைத்து விட்டுச் சென்று விட்டனர். அதற்கு வாழ்வு கொடுக்க வலதுசாரி சமையல்காரர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். மக்கள் பார்வை படும்படியாக நுழைவாயிலுக்கு அருகே பிள்ளையாரை வைத்து இரவோடு இரவாக எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் எழுப்பப்பட்டது.
முற்போக்கு அமைப்புகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் காதுகளுக்கு உறைக்கவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி உள்ள நிலை(Status quo) தொடர தீர்ப்பளிக்கப்பட்டது.
வலியச் சென்று கோயில் எழுப்பிய வலதுசாரி சமையல்காரர் சோளக்கடை வீதியில்அந்தோ பரிதாபம்! மண் வாரி மோதி மரணம் அடைந்தார். இப்போதெல்லாம் மருத்துவமனையில் பிள்ளையாரை யாரும் கண்டு கொள்வதில்லை! காரணம், வழக்கு தொடுத்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்க கோயில் கட்டியவருக்கு சமாதி கட்டி விட்டாரே பிள்ளையார் என்ற அச்சம்!!
– பெரியார் குயில், தாராபுரம்