அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா – அரசுப் பணி நிறைவு –
பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டுரை
சென்னை, செப்.15 எடுத்துக்காட்டான கொள்கைக் குடும்பம் இந்தக் குடும்பம். அந்தக் குடும்பத்தினரைப் பாராட்டுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. வெங்கட்ராமன் – தமிழ்மொழி ஆகியோரைப் பாராட்டுவது என்பது, இவர்களுக்காக அல்ல; இந்தக் கொள்கையின் வெற்றிக்காக என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா – அரசுப் பணி நிறைவு -பாராட்டு விழா!
கடந்த 9.9.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – அரசுப் பணி நிறைவு -பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரையாற்றினார்.
அவரது பாராட்டுரை வருமாறு:
மகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய இந்தக் கொள்கைக் குடும்ப விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, கழகப் பிரச்சார செயலாளர் மணிவிழா காணக்கூடிய அருமை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,
செய்யாறு மாவட்டத் தலைவர், பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் மற்றும் இந்தக் குடும்பத்தைச் சார்ந்த அத்துணை இயக்கத் தோழர்களே,
தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஆஸ்திரேலியாவில், பெரியார்- அம்பேத்கர் அறிவு வட்டத்தை உருவாக்கி, சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மகிழ்நன் அவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விதைத்த விதை எப்படி இருக்கும் என்பதற்கான அறுவடைத் திருவிழா!
இது ஓர் அற்புதமான, மகிழ்ச்சிகரமான விழா வாகும். அவர்கள் பேசவேண்டும்; அதை நாங்கள் கேட்கவேண்டும். இதுவரையில் நாங்கள்தான் பேசியி ருக்கிறோம். விதைத்த விதை எப்படி இருக்கும் என்ப தற்கான அறுவடைத் திருவிழாவாகும் இது.
‘‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’’ நாடகம்!
எனவே, இது மகிழ்ச்சி விழா – இது ஒரு ஹார்வர்ஸ்ட் ஃபெஸ்டிவெல் – அதிலும் செய்யாறைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ‘‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்” நாடகம் நடத்தி, நம்முடைய தலைவர்கள் கைதானது அங்கேதான்.
செய்யாறைப்பற்றி இங்கே கவிஞர் அவர்கள் உரை யாற்றும்பொழுது சொன்னார்.
ஒரு வாரம், 10 நாள்களுக்கு மேல் பொங்கல் விழாவினை திட்டமிட்டு நடத்துவார்கள் என்று.
வேல்.சோ. நெடுமாறன் அவர்கள் சொன்னதுபோன்று, குடும்பம் குடும்பமாக அவ்விழாவில் பங்கேற்பார்கள்.
இயக்கத் தோழர்களின் திண்ணையும்,
சமையல் அறையும்!
எங்களுக்கு, இயக்கத் தோழர்களின் திண்ணை யும், சமையல் அறையும் மிகவும் முக்கியம்.
திண்ணையில் படுத்துக்கொண்டிருப்போம்; எப்பொழுது வேண்டுமென்றாலும், சமையல் அறைக்குச் சென்று சாப்பிடுவோம்.
அவருடைய தந்தையார் மிகக் கண்டிப்பாக இருப்பார், மிகவும் அன்பாக இருப்பார். அதேபோன்று, வெங்கட்ராமனுடைய தந்தையார் அவர்கள் நல்லாசிரியர். மிகவும் அன்பாக இருப்பார் அவர்.
இந்த நேரத்தில் நான் மிகவும் மனம் கலங்கி, வருத்தத்தோடு பார்க்கின்ற ஒரு செய்தி என்ன வென்றால், செய்யாறு ரவி அவர்கள் இல்லையே என்பதுதான்.
செய்யாறு ரவியை இயற்கையினுடைய
கோணல் புத்தி நம்மிடமிருந்து பிரித்தது!
ரவி அவர்கள், என் குடும்பத்தில் ஒருவர். இயற்கையினுடைய கோணல் புத்தி அவரை சீக்கிரம் நம்மிடமிருந்து பிரித்தது.
ரவியினுடைய துணைவியாரை நாம் இந்த நேரத்தில் பாராட்டவேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், அந்தத் துயரத்திலிருந்து மீண்டு, தொய்வில்லாமல் வாழ்க்கைப் பயணத்தை நடத்து கின்றார். அதுதான் இந்தக் கொள்கையினுடைய சிறப்பு.
இந்தக் குடும்பத்தினுடைய சிறப்புகளைப்பற்றி யெல்லாம் இங்கே சொன்னார்கள். அதே நேரத்தில், இழப்பு வரும்பொழுது அதனை எதிர்கொள்ளவேண்டும். அதில் நாம் தோற்றுப் போகக்கூடாது. அதில் வெற்றி பெறுவோம் என்று காட்டியிருக்கிறார்கள் இந்தக் குடும்பத்தினர்.
இந்தக் குடும்பம் எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டான குடும்பமாகும். மகிழ்ச்சிக்கு, கடமைக்கு, வெற்றிக்கு மட்டுமல்ல – இழப்பு வரும்பொழுது, அதை நாம் எப்படி எதிர்கொண்டு, அதில் நாம் வெற்றி பெற்றோம் என்று காட்டவேண்டும் – அதுதான் மிகவும் முக்கியம். அதற்கப்புறமும் இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய ஓர் அற்புதமான குடும்பமாகும்.
Unlike poles attract each other என்று அறிவியலில் ஒன்று உண்டு.
எடுத்துக்காட்டான கொள்கைக் குடும்பம்!
வெங்கட்ராமன் அதிகம் பேசமாட்டார்; மிகவும் அமைதியானவர். தமிழ் அதிகமாகப் பேசுவார். அதைக் கண்டுதான் பயந்து போய் பெண் பார்க்க வந்த வர்கள் ஒடிப் போயிருக்கிறார்கள் என்று அவர் அப்பா சொல்லியிருக்கிறார்.
எடுத்துக்காட்டான கொள்கைக் குடும்பம் இந்தக் குடும்பம். அந்தக் குடும்பத்தினரைப் பாராட்டு வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி.
வெங்கட்ராமன் அவர்களுடைய நன்றி உணர்ச்சி எப்படிப்பட்டது என்றால், எங்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்றும் அத்துணை பேருக்கும் மதிய உணவு!
அதில், ‘‘நான் ‘விடுதலை’ அலுவலகத்தில்தான் பணியாற்றினேன். அதற்குப் பிறகு ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெறவிருக்கிறேன். அந்த விழாவைக் கொண்டாடி, ‘விடுதலை’ அலுவல கத்தில் பணியாற்றும் அத்துணை பேருக்கும் மதிய உணவு அளிக்கவேண்டும். அதற்காகத்தான் இந்த விழா” என்றார்.
உடனே நான் என்ன சொன்னேன் என்றால், ‘‘இன்றைக்கு எனக்கு மிகவும் நெருக்கடியான நாள். இரண்டு நாளில் நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணம் செய்யவேண்டும். இன்று (9.9.2024) மதியம் ஒன்றரை மணிக்கு மருத்துவரிடம் செல்லவேண்டும்.
இதற்கிடையில் மாலையில் கலைஞர் கருணாநிதி நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். பணி செய்ய செய்யத்தான் உற்சாகமாக இருக்கிறது. பணி செய்வதினால், நமக்குக் களைப்பு ஏற்படுவதில்லை.
வடமணப்பாக்கமாக இருந்தாலும், செய்யாறாக இருந்தாலும் எல்லா வகையிலும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும்.
வட்டியும், முதலும் சேர்ந்து
இன்றைக்குத்தான் பாராட்டு!
இவ்வளவு நாள்களாக வெங்கட்ராமன் அவர்கள் என்னிடம் நிறைய திட்டு வாங்கினேன் என்று சொன்னார். அதற்கெல்லாம் வட்டியும், முதலும் சேர்ந்து இன்றைக்குத்தான் பாராட்டு வாங்கியிருக்கிறார்.
இவர்களே என்னை சமாளிப்பது கஷ்டம் என்றால், என்னுடைய துணைவியார் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை நீங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
தந்தை பெரியார் அவர்களிடத்தில்
நான் கற்றுக்கொண்ட ஒன்று!
காரணம் என்னவென்றால், அய்யா அவர்களிடத்தில் நான் பழகியதினால். அய்யா, என்னை திட்டியதில்லை. ஆனால், அதேநேரத்தில், கொஞ்சம் கடுமையாக நான் இருப்பேன். ஏனென்றால், முறையாகவும், தெளிவாகவும் எல்லாம் நடக்கவேண்டும் என்பதினால்தான். இது தந்தை பெரியார் அவர்களிடத்தில் நான் கற்றுக்கொண்ட ஒன்று.
அய்யா அவர்கள், ஒரு சிறிய செய்தியில்கூட மிகவும் கவனமாக இருப்பார்.
அய்யாவை ஒருவர் சந்திக்க வருகிறார் என்பதை, சந்திக்க வருபவர், வாசற்படியில் வரும்பொழுதுதான், அய்யாவிடம், அவர் வருகிறார் என்பதைச் சொல்ல வேண்டும்.
‘‘அவர் வரப் போகிறார், புறப்பட்டு விட்டார்” என்றெல்லாம் சொல்லக் கூடாது.
சில நேரங்களில், சந்திக்க வருகின்றவர், வராமலும் போகலாம். அதற்காகத்தான்.
வெங்கட்ராமன் அவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றிருக்கிறார். நல்ல பழக்கவழக்கம். ஆகவே, அவர் எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடிய அளவில் இன்றைக்கு இருக்கிறார்.
ஒரு நாள்கூட அவர் பணிக்குப் போகாமல் இருந்ததில்லை!
ஒரு நாள்கூட அவர் பணிக்குப் போகாமல் இருந்த தில்லை என்று அவருடைய மகள் சொன்னார். அவர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.
அரசியலில், வாரிசு அரசியல் என்று சிலர் புரியாமல் பைத்தியக்காரத்தனமாகச் சொல்கிறார்கள். இது ஓர் இயக்கம். இந்த இயக்கத்தில், பரம்பரையாக வேர், விழுது வரிசையாக இருக்கவேண்டும்.
35 மணவிழாக்கள் நடைபெற்று இருக்கின்றன!
புலவர் அண்ணாமலை என்றால், அதற்கடுத்து மகிழ்நன் இருக்கிறார். அதேபோன்று, இவருடைய குடும்பத்திலும் 35 மணவிழாக்கள் நடைபெற்று இருக்கின்றன. அதற்குக் காரணம், கொள்கைதான்.
அண்ணன், தம்பி எல்லோரும் இதே கொள்கையில் இருக்கிறார்கள் என்று சொன்னார்களே, அதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
நான் ஒரு கொள்கை, எங்கள் அப்பா இன்னொரு கொள்கை என்று சொன்னால், அது நன்றாக இருக்குமா?
இங்கே எல்லப்பன் அவர்கள் வந்திருக்கிறார்; அரக்கோணத்தில் ஒரு குடும்பத்தைப்பற்றி சொல்வார்கள் அந்தக் காலத்தில், ‘‘ஒரே குடும்பத்தில் எல்லா கட்சியிலும் ஆட்கள் இருப்பார்கள்” என்று.
எல்லா தலைவர்களுக்கும் வேண்டியவர்கள் ஒரு குடும்பத்தில் இருக்கிறார்கள் என்றால், அது பெருமை அல்ல.
நம்மைப் பொறுத்தவரையில், இந்தக் கொள்கை நமது வாழ்க்கை நெறி. இந்தக் கொள்கையால், சம்பாதிப்பதில்லை.
குடந்தை இளங்கோவன் அவர்கள் என்று தொடங்கி ஒரு பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ஆண்டில், ஒவ்வொரு குடும்பமும் ஒரு வரலாறு!
ஒவ்வொரு குடும்பமும் ஒரு வரலாறு இந்த இயக்கத்தில். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ஆண்டில், ஒவ்வொரு குடும்பமும் ஒரு வரலாறு.
தல புராணம் எழுதுவதுபோன்று, ஒவ்வொரு குடும்பத்தைப்பற்றியும் எழுதினால், மிகவும் சிறப்பாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும் இந்த நிகழ்ச்சி!
அவர்களுடைய உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இங்கே வந்திருக்கின்ற அத்துணை தோழர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், குறிப்பாக தாய்மார்களுக்கும், சகோதரி களுக்கும் நான் சொல்வது என்னவென்றால், ஆண்களுக்கு உடல்நிலை சரியாக இருக்கிறதா, என்று பார்ப்பார்களே தவிர, தங்களுடைய உடல்நிலை யைப்பற்றி மகளிர் கவலைப்படுவதில்லை. அப்படி யில்லாமல், தங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
பெண்கள் உடற்பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்!
ஒவ்வொரு ஆண்டும் உடற்பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்; மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
மகிழ்ச்சி என்பதை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. எதில் நமக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ, அது தான் மிகவும் சிறப்பானதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் மிக எளிமையாகச் சொன்னார்.
வெங்கட்ராமனும், சிறீதரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். அதேபோன்று, சகோதரத்துவத்தில் பார்த்தீர்களேயானால், ரவி, வெங்கட்ராமன் ஆகியோர் எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
மூவேந்தர்களான சோமசுந்தரம் –
தாடி அருணாசலம் – டி.பி.சிற்றம்பலம்!
மூவேந்தர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள். மூவேந்தர்கள் ஒன்றாக இருந்ததில்லை, சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த மூவேந்தர்களும் (சோமசுந்தரம் – தாடி அருணாசலம் – டி.பி.சிற்றம்பலம்) அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒற்றுமையாக இருப்பார்கள். ஒரு கூட்டம் முடிவதற்குள், அவர்களுக்கும் சண்டை வந்து, பிறகு சமாதானம் அடைவார்கள். ஆனால், கழகத்தில் மிகத் தீவிரமாக இருப்பார்கள். அய்யா பெரியார் அவர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டால், அதை முன்னின்று செய்வார்கள்.
அதேபோன்று, வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் மிகவும் பயனுள்ளவராக இருக்கிறார். அவரை, நாங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோம். அதேபோன்று, வெங்கட்ராமன் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவரையும் பயன்படுத்திக் கொள்வோம்.
இதனை இவனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (குறள் 517)
இந்த இயக்கம் இப்படித்தான் வளர்ந்தது என்பது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும்.
இவர்களுக்காக அல்ல;
இந்தக் கொள்கையின் வெற்றிக்காக!
இவர்களைப் பாராட்டுவது என்பது, இவர்களுக்காக அல்ல; இந்தக் கொள்கையின் வெற்றிக்காக என்பதுதான் மிகவும் முக்கியம்.
தருமபுரியில், தந்தை பெரியார் சிலையை அண்ணா திறப்பார் என்று முடிவு செய்திருந்தார்கள். அந்த சிலை இரண்டாவது சிலை தந்தை பெரியார் அவர்களுக்கு. அண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதினால், அச்சிலை திறப்பு விழா தள்ளிக்கொண்டே வந்தது. அண்ணா அவர்களால் அச்சிலையைத் திறக்க முடிய வில்லை. கலைஞர் அவர்கள், அய்யா தந்தை பெரியாரின் சிலையை முதன்முதலாகத் திறந்து வைத்தார்.
தந்தை பெரியார் சிலை திறப்பின்போது
கலைஞரின் உரை!
அப்பொழுது கலைஞர் அவர்கள், ‘‘நான் இன்றைக்கு அய்யாவின் சிலையைத் திறக்கிறேன். நான், மாணவப் பருவத்தில் இந்த இயக்கத்திற்கு வந்தேன். அப்பொழுது, ‘‘இது உருப்படுமா?” என்று அஃறிணையில் சொன்னார்கள். நான் உருப்பட்டேனா என்பதை ஊரறியும், உலகறியும்” என்று பேசத் தொடங்கினார்.
ஆகவே, இந்தக் கொள்கையினால், யாரும் தாழ்ந்து போகமாட்டார்கள். ஆனால், சில பேர் தவறாகப் புரிந்துகொண்டு, ‘‘இந்தக் கொள்கையில் போனாருங்க, கெட்டுப் போனாருங்க, வீழ்ந்து போனாருங்க” என்று சொல்வார்கள்.
இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காததினால்தான் பலர் கெட்டுப் போயிருப்பார்கள். அதற்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லலாம்.
ஆகவே, இந்த மணிவிழா என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. உள்ளபடியே இது Money விழாவும்கூட, காசோலையை கொடுத்திருக்கிறார், பெரியார் உலகத்திற்கு.
பெரியார் உலகத்திற்காக ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்கவேண்டும்!
பெரியார் உலகத்திற்காக ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்கவேண்டும். நாமெல்லாம் நாளைக்கு இருப்போமே இல்லையோ – அது இயற்கையினுடைய அடிப்படையாகும்.
உள்ளூரில் மட்டும்தானே இந்த இயக்கம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், இன்றைக்கு உலகம் பெரியார்மயம்; பெரியார் உலகமயமாகி இருக்கிறார்.
வருகின்ற 15 ஆம் தேதி ஜப்பான் டோக்கி யோவில் பெரியார் பிறந்த நாள் விழா! அதே போன்று, 17 ஆம் தேதி சிங்கப்பூரில், தேசிய நூலகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா!
அடுத்ததாக, இங்கே மகிழ்நன் அவர்கள் வந்தது, ஆஸ்திரேலியாவில் பெரியார் பிறந்த நாள் விழாவை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அடுத்த மார்ச் மாதம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம்.சென்னை, செப்.15 எடுத்துக்காட்டான கொள்கைக் குடும்பம் இந்தக் குடும்பம். அந்தக் குடும்பத்தினரைப் பாராட்டுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. வெங்கட்ராமன் – தமிழ்மொழி ஆகியோரைப் பாராட்டுவது என்பது, இவர்களுக்காக அல்ல; இந்தக் கொள்கையின் வெற்றிக்காக என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அடுத்ததாக, இங்கே மகிழ்நன் அவர்கள் வந்தது, ஆஸ்திரேலியாவில் பெரியார் பிறந்த நாள் விழாவை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அடுத்த மார்ச் மாதம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம்.