தெற்குநத்தம், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சண்முகம் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையரும், திராவிடர் கழக மாநில கலைத்துறைச் செயலாளர், வீதிநாடக இயக்குநர் ச.சித்தார்த்தன், ச.முத்துச்செல்வன், ச.சித்ரா (நீடாமங்கலம்) ஆகியோரின் தாயாருமான சரோஜா சண்முகம் அம்மையார் (வயது-85) இன்று (14.9.2024) சனிக்கிழமை காலை மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரின் இறுதி நிகழ்வு இரங்கல் கூட்டம் இன்று மாலை 4.00 மணியளவில் தெற்கு நத்தம் கிராமத்தில் நடைபெறுகிறது. கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தோழர் சித்தார்த்தனிடம் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்தார்.