மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கவும் முடிவு..!
திருப்பூர், செப்.14 பரம்பொருள் அறக்கட்டளையில் காவல்துறையினர் தீவிர ஆய்வு செய்தனர். மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்களின் பின்னணி குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமான திருப்பூர் குளத்துப்பாளைம், பரம்பொருள் அறக்கட்டளையில் அய்ந்தரை மணி நேரத்துக்கு மேலாக சைதாப்பேட்டை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அலுவலகத்திலுள்ள ஆவணங்கள், நன்கொடை வசூல், அறக்கட்டளை செயல்பாடு குறித்தெல்லாம் மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வங்கி பணப் பரிவர்த்தனை விவரம், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மகாவிஷ்ணு மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குரூப் 1 முதல் நிலைத்
தோ்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, செப்.14 குரூப் 1 முதல் நிலைத் தோ்வுக்கான முடிவுகள் 9.9.2024 அன்று வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வுக்காக 1907 போ் தோ்வு செய் யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ் வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் ஆகிய பதவியிடங்களை உள்ளடக்கியது குரூப் 1. இந்தப் பிரிவில் 90 பதவியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வை 2 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதினா். இதைத் தொடா்ந்து, முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (9.9.2024) வெளியாகின.
முதல்நிலைத் தோ்வை சிறப்பாக எழுதியவா்களில், 1907 போ் முதன்மைத் தோ்வுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா் என்று தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா். முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு டிசம்பரில் முதன்மைத் தோ்வு நடைபெறவுள்ளது.