முட்டை ஆபத்தான உணவு அல்ல. குழந்தைகளுக்கு நாள்தோறும் 50 கிராம் முட்டைகள் இரண்டு கொடுக்கலாம். ஆரோக்கியமிக்க முதியவர்களும் இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். 100 கிராம் முட்டையில் 10 கிராம் கொழுப்பு இருக்கிறது. கெடுதல் என்று சொல்லப்படுகின்ற கொழுப்பு 3.2 கிராம் தான். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு 4 கிராம். நாள் ஒன்றுக்கு 40 கிராம் வரை கொழுப்பு தேவைப்படுகிறது. முட்டையில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு வலு சேர்க்கும் மஞ்சள் கரு தேவைதான்.