ஜனநாயகப் பேயும், எலெக்சன் நோயும், பதவி வருவாய்களும் – இவை ஒழியுமா என்பது ஒருபுறமிருக்க, நம்மில் பெரும் பணக்கார செல்வவான்களும், உயர்தர உயர்நிலைக் கல்வி கற்றவர்கள் என்னும் கல்விமான்களும், பெரும் பதவி என்பவைகளில் இருக்கும் பதவியாளர்களும் பலர் இருக்கிறார்கள். இருந்தும் தமிழர்களின் இழிநிலையை எதிர்த்துப் போராட முன் வருகின்றார்களா? பார்ப்பனர்களுக்குப் பயந்து அவர்களுக்கு ஆதரவும், அடிமைத் தன்மையும் அளிப்பவர்களாகவே இருந்து வரலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’