திருச்சி, செப். 14- அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 12.9.2024 மாலை 7 மணி அளவில் பெரியார் மாளிகையில் திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ். மாவட்ட மகளிர் பாசறை தலைவர், அம்பிகா கணேசன்.மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி சுரேஷ்.திருவெறும்பூர் ஒன்றிய மகளிரணி தலைவர் ரூபியா ஸ்டாலின்.ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கலந்துரையாடலில், திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் 17.9.2024 அன்று காலை சரியாக 9 மணிக்கு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பிறகு அரசு மருத்துவமனையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அடுத்து பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பிறகு ஏர்போர்ட் மய்யப் பகுதியில் மிகப்பெரிய அளவில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து, பிறகு தந்தை பெரியார் கல்லூரியில் கொடி ஏற்றி வைத்து, பிறகு ஜெயில் கார்னர் பகுதியில் கொடியேற்றி, பிறகு சுப்பிரமணியபுரம் பகுதி தலைவர் மருதை இல்லத்தில் கொடியேற்றி, பிறகு நீதிமன்றம், வண்ணை நகர். ஜெயில் பேட்டை. மற்றும் மார்க்கெட் பகுதி தலைவர் மணி வேலு இல்லத்தில் கொடியேற்றி விட்டு பெரிய கடைவீதி. கோட்டை வாசல். அண்ணா சிலை. மற்றுமுள்ள இடங்களில் கொடியேற்றி விட்டு திருவரங்கம் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அந்தப் பகுதி முழுவதும் 32 கொடிக் கம்பங்களில் கொடி ஏற்றிவிட்டு மதியம் திருவரங்கத்தில் அனைத்து தோழர்களுக்கும் மற்றும் உள்ள திருவரங்க பெரியார் பற்றாளர்கள் அனைவருக்கும் திருவரங்கம் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வழக்குரைஞர்,எஸ். ஹரிஹரன் ஒவ்வொரு ஆண்டும் புலால் உணவு அளிப்பது போல், இம்முறையும் புலால் உணவு அளித்து பிறகு தோழர்கள் விடுபட்ட கொடிக்கம்பங்களில் மாலையில் கொடியேற்றிவைப்பது என்றும்.தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிறகு 25.8.2024.அன்று இயற்கை எய்திய இளைஞர் அணி மாவட்ட மேனாள் செயலாளர் சு.இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ் அவர்கள் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
கூட்டத்தில் திருச்சி மாநகர் செயலாளர் வ.ராமதாஸ். காட்டூர் கிளைக் கழக செயலாளர் ச.சங்கிலி முத்து, மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ். மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.இராஜசேகர், திருவரங்கம் பகுதி செயலாளர் இரா.முருகன், மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் குத்புதீன். மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெண்ணி, ஜெயில் பேட்டை பகுதி துணைத்தலைவர் குணா, ஜெயில் பேட்டை பகுதி செயலாளர் சேவியர். மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆ.அறிவிச்சுடர், திருவெறும்பூர் மாணவர் கழகம் சு.அறிவுச்சுடர், வாழவந்தான் கோட்டை விஜயராகவன்.திருநாவுக்கரசு. திருவரங்கம் பகுதி பொன்னுசாமி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ் நன்றி கூறினார்.