செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
1 Min Read

அனுமதி கொடுப்பது எப்படி?

* விநாயகர் ஊர்வலத்தில் காவிகளுக்குள் வன்முறைகள், சண்டைகள்!
>> தொடர்ந்து இத்தகைய வன்முறைகள் வெடிக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், விநாயகர் ஊர்வலத்திற்கு அரசுகள் அனுமதி கொடுப்பது எப்படி?

மிஸ்டு கால் முயற்சி என்னாயிற்று?

* பி.ஜே.பி.யில் 200 உறுப்பினர்களை பூத் வாரியாக சேர்த்தால், பரிசு. – தமிழிசை சவுந்திரராஜன் அறிவிப்பு
>> செல்பேசி மூலம் உறுப்பினர் சேர்க்கும் முயற்சி என்னாயிற்று?

மோகன் பகவத்துக்குச் சவாலா?

* பி.ஜே.பி. இருக்கும்வரை, இட ஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால்
>> இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்குச் சவாலா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *