மத்தூர்,ஆக.6 – கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட் டம் 30.7.2023 அன்று மதியம் 2 மணியளவில் மத்தூர் இந்திரா காந்தி -அண்ணா சரவணன் இல் லத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் மு.இந்திரா தலைமை யில் நடைபெற்றது. மத்தூர் ஒன் றிய மகளிர் அணி செயலாளர் சி.முருகம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் த.அறிவரசன், மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மத்தூர் ஒன்றிய தலைவர் கி முரு கேசன், செயலாளர் வே.திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் பெரியாரியியல் பயிற்சி முகாம் நடத் துவது குறித்து இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவ ணன் தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பர்கூர் ஒன் றிய செயலாளர் மு.ரகுநாதன், மக ளிர் அணி தோழர்கள் மா.சிவசக்தி, மு.உண்ணாமலை, வி.வசந்தி, காவே ரிப்பட்டினம் நகர அமைப்பாளர் இராஜேந்திரபாபு, மாநில மாண வர் கழக துணை செயலாளர் இ.ச.மணிமொழி ஆகியோர் உரை யாற்றினர். இறுதியாக மாநில மக ளிர் அணி செயலாளர் தமிழ்ச் செல்வி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஓவியரணி சா.திராவிடராசன், ஒன்றிய இளை ஞரணி தலைவர் அரசகுமார், மாண வர் அணி தோழர்கள் சிறீதர், இ.ச.அகரன், சி.மா.ரூபிகா, சகுந் தலா, புலிக்கொடி, வெ.பப்பி, தி.சுதா, தென்றல், சரோஜா, சங்கீதா, பொன்.சிவகுமார் மற்றும் கழகத் தோழர் கலந்து கொண்டனர்.
மிகப்பெரிய வரலாறாக, தமிழர் தலைவர் அவர்களால் திறந்து வைக் கப்பட இருக்கும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டட திறப்பு விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மகளிர் அதிக அளவில் பங்கேற் பது எனவும், தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மக ளிர் சந்திப்பு நடத்துவது எனவும், வாய்ப்புள்ள இடங்களில் தமி ழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும், மகளிர் அணி – மகளிர் பாசறைப் பொறுப் பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்புப் பணியை மேற்கொள்வது என வும், தலைமையால் அறிவிக்கப் பட்டுள்ள பெரியாரியல் மகளிர் பயிற்சிப் பட்டறையை கிருட்டி னகிரி மாவட்டம் மத்தூர் கிரா மத்தில் மிகச் சிறப்பாக நடத்து வது எனவும், மத்தூரில் நடை பெற்ற மகளிர் கருத்தரங்க கூட் டங்களின் போது, ஏற்கனவே நடைபெற்றதுபோல “சந்திப் போம் வாசிப்போம்” என்ற இதழ்கள் வாசிப்பு நிகழ்ச்சியை மகளிர் இல்லங்களில் தொடர்ந்து நடத்திடவும், அப்பொழுது இயக்க இதழ்களான விடுதலை, பெரியார் பிஞ்சு, உண்மை இதழ்களை மகளிர் வாசித்து கருத்துக்களை அறிந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப் பட்டது.