ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ‘பஞ்சான்யா‘வின் சமூக வலைதளப் பக்கத்தை ‘எக்ஸ்‘ நிறுவனம் முடக்கிவிட்டது.
‘பஞ்சான்யா‘ இதழின் சமூக வலைதளக் கணக்கில் மத விரோதக் கருத்துகளும், இரண்டு குழுக்களிடையே பகைமையை வளர்க்கும் விதமாகப் பேச்சுகளைப் பதிவதும்,
18 வயதிற்குக் கீழ் உள்ளோர் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஆதரிக்கும் விதமாகவும் தொடர்ந்து பதிவிட்டதை அடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ‘பஞ்சான்யா‘வின் ‘எக்ஸ்‘ சமூக வலைப் பக்கம் முடக்கப்பட்டது.
6.9.2024 அன்று முடக்கப்பட்ட இந்த வலைதளக் கணக்கு டில்லி மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக (7.9.2024) மறுநாள் முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கிறது?
சங் பரிவார்களின் குணம் கொடூரத்தின் தொட்டிலாக அல்லவா ஊஞ்சலாடுகிறது.
இணைய தளம் முதலில் முடக்கப்படுவானேன்; பிறகு அந்த முடக்கம் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் (மேலிடம் என்பது அதுதானே!) அழுத்தத்தால் அடுத்த நாளே விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றால், நாடு நாசகாரத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா, இல்லையா?
பாசிச ஆட்சி என்றால், பாய்பவர்கள் – இந்த செயலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
பதில் உண்டா?
– மயிலாடன்