ஜப்பானில் உள்ள டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் சுயமரியாதை குறித்து புதிய தலைமுறையினர் மற்றும் மூத்தோர்களிடம் உள்ள தாக்கம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர்
இதற்காக தன்னார்வலர்கள் மற்றும் இணையவழியில் மக்களிடம் தங்களின் சுயமரியாதை குறித்த கருத்துக்களை பகிர அழைப்பு விடுத்தனர்.
அவ்வாறு வந்த கருத்துக்களை பகுப்பாய்வு செய்த போது ஜப்பானில் சுயமரியாதை குறித்து மூத்தவர்களிடமிருந்து கற்பதற்கு இளைய தலைமுறை மிகவும் ஆர்வமாக உள்ளதாக முடிவுகளில் தெரியவந்தது.
50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் தலைமுறைகளுக்கு இடையே சுயமரியாதை தொடர்பான பார்வைகள் வேறுபட்டுள்ளதை அறிந்துள்ளனர். அவர்கள் சுமரியாதை தொடர்பான விழிப்புணர்வை புதிய தலைமுறைக்கு கடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் புதிய தலைமுறைகள் சுயமரியாதை பொது ஒழுக்கம், இன்றி வாழ்வதை விரும்புவதில்லை.
குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் அவசரகதியான வாழ்க்கைப் போக்கில் சுயமரியாதை கவனத்தில் கொள்ளாத ஒன்றாக கருதப்படுகிறது. சுயமரியாதை தொடர்பான வற்றை அவர்களுக்குண்டான வாழ்வியல் நடைமுறையாக பார்க்கின்றனர்.
அதாவது அடுத்த தலைமுறைகளுக்கு சுயமரியாதை தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுவதில் மேற்கத்திய நாட்ட வர்களுக்கு அக்கறை இல்லை.
அதே நேரத்தில் கிழக்கத்திய நாடுகள் குறிப்பாக ஜப்பான் போன்றவற்றில் முதியவர்கள் தங்களின் இளைய தலைமுறையினர் சுயமரியாதை உள்ள மனிதர்களாக வளருவதை விரும்புகின்றனர்.
70 வயதிற்கும் மேற்பட்டோர் கூறும் போது, தங்களுக்கு பெற்றோர்களும் இதர மூத்த உறுப்பினர்களும் சுயமரியாதை தொடர்பானவற்றை கற்றுக் கொடுத்தனர். அதை நாங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளோம் என்று கூறினர்.
சுயமரியாதை வாழ்க்கை முழுவதும் மாறாமல் இருப்பதில்லை, ஆனால், சமூகத்தில் பொருளாதார மாற்றம் ஏற்படும் போது தனிபட்ட வாழ்க்கையிலும் மாற்றம் வருகிறது. இதனால் சுயமரியாதை தொடர்பானவற்றில் இளைய தலைமுறைகளிடையே அக்கறை இன்மை ஏற்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் இந்த முறையில்தான் இளைய தலைமுறையிடம் சுயமரியாதை குறித்த அக்கறையின்மை அதிகரித்துள்ளது.
எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள், சுயமரியாதை குழந்தைப் பருவத்தில் அதிகமாக இருக்கும், வளரிளம் பருவத்தில் குறையும், ஆனால் பின்னர் வயது வந்தோர் பருவம் முழுவதும் தொடர்ந்து அதிகரிக்கும், அய்ம்பதுகள் மற்றும் அறுபதுகளில் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையும் என்பதைக் காட்டியுள்ளன.
அதாவது பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப மேற்கத்திய நாடுகளில் சுயமரியாதை தொடர்பான பார்வை மாறுகிறது
ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இதில் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது சுயமரியாதை வாழ்வியலில் ஒரு கருத்தேற்ப்பட்டு வெவ்வேறு வயதுகளில் தொடர்ச்சியாக தங்களின் சுயமரியாதைக் குணத்தை பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானைப் பொறுத்தவரை தனிமனித ஒழுக்கம் முக்கியமாக கருத்தப்படுகிறது, அங்கு சட்டத்தையும் தாண்டி தாங்களாகவே அனைத்து வகையிலும் ஒழுக்கமுள்ள ஜப்பானியர்களாக இருப்பதை விரும்புகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொண்ட போதிலும் சுயமரியாதை தொடர்பானவைகளில் தங்களின் மூத்தோர்களிடமிருந்து மேலும் கற்றுக்கொள்ள ஆர்வமுடன் உள்ளனர்.
இதை அவர்கள் உணர்வுப்பூர்மான ஒன்றாக கருதுகின்றனர். இந்தக்குணம் அவர்களை தனித்துவம் மிகுந்த ஆற்றல் மிக்க, அறிவார்ந்த மனிதச் சமூகம் உருவாக காரணியாக அமைந்துவிடுகிறது
சுயமரியாதை வளர்ச்சிப் பாதையை தெளிவுபடுத்த, சுய-விருப்பம் மற்றும் சுய-திறன் ஆகிய இரண்டு அம்சங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தலைமுறைகளுக்கு சுயமரியாதை எவ்வாறு கடத்தப்படுகிறது – தலைமுறைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை எப்படி நிரப்புகிறார்கள் என்று, டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பிரிவு பேராசிரியர் யுஜி ஓகிஹாரா மற்றும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் கல்வி பள்ளியின் பேராசிரியர் தகாஷி குசுமி ஆகியோர் வளரிளம் பருவம் முதல் முதுமை வரை சுய மதிப்பில் உள்ள வயது வேறுபாடுகளைக் குறித்து விரிவாக பெரிய அளவிலான ஆய்வை நடத்தினர்,
இதில் சுய-விருப்பம் மற்றும் சுய-திறன் ஆகிய இரண்டும் அடங்கும்.
2009 முதல் 2018 வரை ஜப்பானில் கிட்டத்தட்ட அனைத்து மக்களிடமும் சுயமரியாதை தொடர்பான கருத்துகள் பெறப்பட்டது.
அவற்றைப் பகுப்பாய்வு செய்தனர். 16 முதல் 88 வயதுக்குட்பட்ட ஜப்பானியர்களிடம் பதில்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு ஆய்வும் அவர்களின் சுயமரியாதை தொடர்பான குணத்தை அளவிட பெரிதும் உதவியாக இருந்தது.
இந்த அளவீட்டில் பெரும்பான்மையோர் – நான் என்னைப் பற்றி பெருமையாக கருதுகிறேன்.
சுயமரியாதையில் “எனக்கு நிறைய நல்ல பண்புகள் இருப்பதாக உணர்கிறேன்” மேலும் சுயமரியாதை குணத்தால் நான் என்னுடைய திறமைகளை ஒப்பிட்டு அதனை வளர்த்துக்கொள்ளும் நிலையை அடைகிறேன்
திறமையை அளவிடும்போது. பங்கேற்பாளர்கள் அவர்களே பிறரது சுயமரியாதை தொடர்பான கருத்திற்கு மதிப்பெண் போட்டனர். கிட்டத்தட்ட பெரும் பாலானவர்கள் 3 முதல் 5 மதிப்பெண் அளித்திருந்தனர்.
இந்த முடிவுகள் காட்டுவது என்னவென்றால், சுய மரியாதை தொடர்பான அக்கறை வளரிளம் பருவத்தில் குறைவாக இருக்கும். ஆனால், வயது வந்தோர் பருவத்திலிருந்து முதுமை வரை படிப்படியாக அதிகரிக்கும் – வளரிளம் பருவத்திலிருந்து நடுத்தர வயது வரையிலான மாற்றங்கள் அய்ரோப்பா மற்றும் அமெரிக்காவில் முந்தைய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போனாலும், முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டதைப் போல் 50களிலிருந்து சுய மதிப்பில் எந்தச் சரிவும் இல்லை. எனவே, இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சுய மதிப்பின் வளர்ச்சிப் பாதை என்பது வெவ்வேறு கலாச்சாரங்களில் வேறுபடலாம் என்பதைக் குறிக்கின்றன.
“அய்ரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடுத்தர வயதுக்குப் பிறகு சுய மதிப்பு குறைவதற்கான காரணங்களில் ஒன்று, முதியவர்கள் தங்கள் வரம்புகள் மற்றும் குறைகளை ஏற்றுக்கொள்ள வருகிறார்கள்,
இது தங்களைப் பற்றி மிகவும் பணிவான, மிதமான மற்றும் சமநிலையான பார்வையைக் கொண்டிருக்க வழிவகுக்கிறது என முந்தைய ஆராய்ச்சி வலியுறுத்தி யுள்ளது.
மறுபுறம், ஜப்பானில் உள்ள மக்கள் இளம் வயதிலேயே பெரியவர்களிடமிருந்து சுயமரியாதையைக் கற்றுக் கொண்டு அதன் மூலம் பணிவான பார்வையைக் கொண்டிருப்பதாக அறிக்கைகள் காட்டியுள்ளன.
இந்த ஆய்வில் ஜப்பானியர்களிடம் சுயமரியாதை குறையாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்,” என்று மருத்துவர் ஓகிஹாரா கூறுகிறார்.
மூத்தோர்களை மதிக்கும் கலாச்சாரம் உள்ளிட்ட கலாச்சார வேறுபாடுகளை உருவாக்கக்கூடிய பிற காரணிகளைக் கண்டறிய மேலும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.
ஜப்பானியர்களிடையே இளையோர்களிடம் சுயமரியாதை தொடர்பானவைகளில் தொய்வு ஏற்படுகிறது. அதை அவர்கள் தங்களின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
எனவே, இந்த வயதில் ஏற்படும் இந்த சுயமரியாதை தொடர்பான கருத்துகள் எவ்வாறு மூத்தோர்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர்.
இதற்கு மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது, மேலும் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதும், இதே போன்ற முடிவுகளைப் பெற முடியுமா என்பதை சரிபார்ப்பதும் அவசியம்.
“வயது வேறுபாடுகள் மற்றும் சுய மதிப்பின் வளர்ச்சிப் பாதைகளை ஆராய்வது மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி கல்வி ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல், நடைமுறை மற்றும் சமூக முக்கியத்துவமும் கொண்டது,” என்று மருத்துவர் ஓகிஹாரா விளக்குகிறார்.
ஜப்பானைப் பொறுத்தவரை சுயமரியாதை அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் தங்களின் சுயமரியாதை குணங்களை மூத்தோர்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர்.
நவீன மாற்றத்திற்கு சுயமரியாதை குணத்தின் பங்கும் முக்கியத்துவம் வகித்ததாக கருகின்றனர்.
இந்த ஆய்வு ஜப்பானின் கல்வி, தொழில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கும்மற்றும் மருத்துவம் உள்ளிட்ட ஜப்பானின் உள்கட்டமைப்பில் ஜப்பானியர்களின் பங்கு தொடர்பானவைகளில் சுயமரியாதை எந்த அளவு பங்கு வகித்துள்ளது என்பதை கண்டறிய பெரிதும் உதவியாக இருக்கும் என ஓகிஹாரா மற்றும் குசுமி கூறியுள்ளனர்.
(ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்: சரவணா)