“மைசூர் நகரில் மதச்சார்புள்ள மடம் ஒன்றால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் மாணவர்கள் குடுமி வைத்துக்கொள்ள மறுத்து கிராப் வைத்துக் கொண்டதால் அவர்களுக்கு சாப்பாடு மறுக்கப்படுகிறது. இது சம்பந்தமாக எனக்கு 43 மாணவர்களிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அரசாங்கம் உடனடியாக விடுதி நிர்வாகத்தினர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுவாக இம்மாதிரி மதவெறிகளை ஒழிக்க மைசூர் மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பெரியார் ஈ.வெ.ரா. போன்ற வர்கள் பிறக்க வேண்டும். அவரைப்போல் மக்களிடம் சுயமரியாதைக் கொள்கைகளை வளர்க்க வேண்டும்.
அப்போதுதான் ஜாதி வேறுபாடுகள் ஒழியும். தனிப்பட்டவர்கள் தங்கள் ஜாதிப் பெருமைகளை வெளிப்படுத்துவதை தடுக்கவேண்டும்.
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களிடம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சுயநலமற்ற அயராத உழைப்பினால் அவர் தமிழ்நாட்டில் இருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து வருகிறார். அதுபோன்ற முயற்சிகள் இங்கும் எடுக்கவேண்டும். கோயிலில் அர்ச்சகர் வேலைக்கும் எல்லோரையும் அனுமதிக்க வேண்டும்.”
(மைசூர் சட்டப்பேரவையில் எஸ்.எம்.சந்திரசேகர்)