சென்னை,ஆக.6 -தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆண்டுதோறும் குறுவை, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப் படும் நெல், தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் மூலம் கொள்முதல் செய்யப்படு கிறது. அதற்கான தொகை குறிப் பிட்ட காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022–2023ஆம் ஆண்டு கொள் முதல் (காரீப்) பருவத்தில் 3,497 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டு, ஒன்றிய அரசின் முன்அனுமதி பெற்று, முன்கூட் டியே அதாவது செப்.1ஆம் தேதி முதலே கொள்முதல் மேற்கொள் ளப்பட்டது. வழக்கமாக இது அக்டோபரில் தொடங்கும்.
2022 செப்.1ஆம் தேதி முதல் கடந்தஜூலை 25ஆம் தேதி வரை 42.29 லட்சம் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டு, 8.82 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.9,096.67 கோடி வரவு வைக்கப் பட்டது. அந்த பருவத்தில் 9.70 லட்சம் டன் கூடுதலாக கொள் முதல் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
முதலமைச்சர் கோரிக்கை: இந் நிலையில், 2023–2024ஆம் ஆண்டு காரிப் பருவத்துக்கான நெல் கொள்முதலையும் முன்கூட்டியே, அதாவது செப்.1ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்குமாறு, ஒன்றிய உணவுத் துறை அமைச் சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதினார். தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக் கரபாணி நேரில் சந்தித்தும் வலி யுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் அறிவுறுத்தலின்படி, கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகள், அரவை ஆலைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன.
இந்நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, செப்.1ஆம் தேதி நெல் கொள்முதல் தொடங்க ஒன்றிய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலை மைச் செயலருக்கு ஒன்றிய உணவுத் துறை சார்பு செயலர் அசோக்குமார் வர்மா எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 21ஆம் தேதி கடிதத்தில் கேட்டுக் கொண்டதன்படி, 2023-2024 காரிப் பருவத்துக்கான நெல் கொள்முதலை செப்.1ஆம் தேதி முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொள் முதல் அளவு, அரவை பருவம் தொடர்பான முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் மாநில உணவுத் துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நெல் கொள்முத லுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு உணவுத் துறை விரைவில் தொடங்க உள்ளது.