அரூர், செப். 13- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் துண்டறிக்கை வழங்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்புக் கிணங்க விடுதலையில் வெளிவந்த அறிக்கையை (பெரியார் அண்ணா பிறந்தநாளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்) செயல் படுத்தும் விதத்திலும், மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் விதத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள “பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி” மற்றும் “பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி” மற்றும் “பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்” தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன் ஒருங்கிணைப்பில், இர.இராஜேஸ் தலைமையில், தென்னரசு, பிரேம்குமார், சஞ்சய், தென்னிலவன் இணைந்து 1000 துண்டறிக்கைகளை மாணவர்களுக்கு வழங்கினர்.