கீரமங்கலம், செப். 13- அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கீரமங்கலத்தில் எம்.எஸ்.ஆர் வளாகத்தில் 8.9.2024 மாலை 5.30 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.மாரிமுத்து தலைமையேற்றார். மாவட்ட கழக செயலாளர் செகாதப்பட்டினம் ச.குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் கரம்பக்குடி.முத்து, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் க.வீரையா, பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்.தஞ்சை.இரா.செந்தூரப்பாண்டியன் கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி கருத்து ரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழாவை கழக குடும்பங்கள் தோறும் கழக கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் பொதுமக்கள் மத்தியில் எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்றும் தந்தை பெரியார் பட ஊர்வலத்தையும் நடத்த வேண்டும் என்றும் வாய்ப்பு இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் சட்ட பிரிவு 51 A (h) விளக்கி மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டங்களை தமிழர் தலைவர் அறிவுறுத்தல் படி நடத்திட வேண்டும் மேலும் விடுபட்டு இருக்கும் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்களையும் விரைவில் நடத்த வேண்டும் என்றும் மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அறந்தாங்கி நகர செயலாளர் வழக்குரைஞர் இரா.குமார் அனைவருக் கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழாவை இல்லம் தோறும் கழக கொடி ஏற்றியும் இனிப்புகள் வழங்கியும்பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பான முறையில் கொண்டாடுவது என்றும், கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது என்றும், ஒன்றியங்கள் தோறும் தெருமுனை பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கழக துணை தலைவர் ப.மகராசா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் க. வீரையா, கொத்தமங்கலம் அ.ராமையன், மீமிசல் கார்த்திக், பொறியாளர் ச.திராவிட நளன் மற்றும் பெரியார் பிஞ்சுகள் இன்னிலா, இன்னிலன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இக்கலந்து ரையாடல் கூட்டம் 9.00 மணியளவில் நிறைவடைந்தது.