வணக்கம். எனக்கு விடுதலை இதழ் ஊக்கமும், உற்சாகமும் தருகிறது. மீண்டும் மீண்டும் ‘மானமும், அறிவுமே, மனிதனுக்கு அழகு’ என்று பெரியார் சொன்னது என் காதுகளில் மட்டுமல்ல என் சிந்தனைகளில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்தி வந்தால் புத்தி போகுமே! பக்தி என்ற பெயரில் கல்வியை எளிய மக்களிடமிருந்து பறிக்க நினைக்கின்றனர். இன்றும், இன்னும் அந்த பழைய கலாச்சாரத்தையே புகுத்த நினைக்கிறார்கள். இன்றும் வேகமாய் மயிலாடன் கலி. பூங்குன்றன் எழுத வேண்டும். அறியாமையை நீக்க வேண்டும். விடுதலை என்னை மீண்டும் மீண்டும் படிக்கவும் எழுதவும் வைக்கிறது. ஒரு பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் இன்று இந்த சிவகாமிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்காது. நான் நித்தம் நித்தம் நினைப்பது ஈரோட்டு ராமசாமியையே!
– நா. சிவகாமி, சென்னை – 600116