சென்னை, ஆக. 6 – சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 8.8.2023 வரை ஓரிரு இடங்களிலும், வரும் 9, 10ஆம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.