சென்னை, ஆக. 6 – தமிழ்நாட் டில் 27 அய்பிஎஸ் அதி காரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தர வில், லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை இயக்குநராக அய்.பி.எஸ். அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி, குடி மைப் பொருள் வழங்கல் சிஅய்டி பிரிவு தலைமை இயக்குநராக அய்பிஎஸ் அதிகாரி வன்னியபெரு மாள், சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி தலைமை இயக்குநராக அய்பிஎஸ் அதிகாரி ராஜீவ்குமார், பொருளாதார குற்றப் பிரிவு துணை தலைமை இயக்குநராக அய்பிஎஸ் அதிகாரி பால நாக தேவி, மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் தலைமை இயக்குநராக அபின் தினேஷ் மோடக், காவல் துறை நிர்வாகப் பிரிவு துணை தலைமை இயக்குநராக அய்பிஎஸ் அதிகாரி வினித் தேவ் வான் கடே, திருச்சி காவல் ஆணையராக அய்பிஎஸ் அதிகாரி காமினி நியமிக்கப்படுகின்றனர்.
திருச்சி காவல் ஆணை யராக இருந்த சத்யப்பிரியா சென்னை பொரு ளா தார குற்றப்பிரிவு காவல் துறை தலைவராகவும், வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி மதுரை காவல்துறை தலைமை இயக்குநராகவும், புதிய வடக்கு மண்டல இணை ஆணையராக தலைமையிட இணை ஆணையர் சாமுண்டேஸ்வரி, தென் மண்டல காவல்துறை இணையாளராகவும் அஸ்ரா கார்க் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராகவும், பொரு ளாதார குற்றப் பிரிவு காவல்துறை இணை ஆணையர் ஆசியம்மாள் சென்னை தலைமையிட காவல்துறை இணை ஆணையராகவும், சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோக நாதன் மதுரை காவல் ஆணையராகவும், கோவை தலைமை இயக்குநர் சுதா கர் சென்னை போக்குவ ரத்து காவல் ஆணையரா கவும், மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல காவல்துறை தலைமை இயக்குநராகவும், காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவு தலைமை இயக்குந ராக சந்தோஷ் குமார், மேற்கு மண்டல காவல் துறை தலைவராக புவ னீஸ்வரி நியமிக்கப்படுகின்றனர்.