சென்னை, செப்.12- தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பில் 614 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில்
செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாநில அரசு சாா்பில் 10.9.2024 அன்று வெளியிடப்பட்ட செய்தி:
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7,500 கோடி மதிப்பில் பேராசிரியா் அன்பழகனாா் பள்ளி மேம் பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 614 பள்ளிகளுக்கு ரூ.1,086 கோடி செலவில் உள்கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் 654 அரசுப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங் களை நிறுவ ரூ.41.85 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. வகுப்பறைகளை திறன்மிகுந்ததாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 28,794 பள்ளிகளில் ரூ.551.411 கோடி மதிப்பில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தற்காலிக அடிப்படையில் ஆசிரியா் நியமனம்: ஆசிரியா் காலிப் பணியிடங்களால் கற்பித்தல் பணி தடைபடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு இதுவரை 14,019 ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலமாக நியமனம் நிரப்பப்பட்டுள்ளன. 79,723 இடை நிலை ஆசிரியா்களுக்கு ரூ.101 கோடியில் கைய டக்கக் கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளன.
கிராமப்புற மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்ல வசதியாக, 3.44 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.165.84 கோடி செலவில் இலவசமாக மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.