ஊரகப் பகுதிகளில் 5,000 நீர் நிலைகள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

3 Min Read

சென்னை, செப்.12– ஊரகப் பகுதிகளில் 5,000 நீா்நிலைகள் புன ரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளாா். இந்தத் தக வலை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் அய்.பெரிய சாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் 10.9.2024 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 22 ஆயிரத்து 51 சிறுபாசன ஏரிகள் உள்ளன. முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 5,000 சிறுபான ஏரிகளை புனரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இயந்திரங்களைப் பயன்படுத்தி சிறுபாசன ஏரிகள் தூா்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்படும். நீா்போக்கி, மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளிலும் பழுதுகள் நீக்கப்பட்டு, சீா் செய்யப்படும். இந்தத் திட்டம் பொது மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும்.

பயன்கள் என்ன?

நீா்நிலைகள் புனரமைக்கப்படுவதால், அவற்றின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீா் மட்டம் உயரும். வேளாண் நிலங்களுக்கு நீா்ப்பாசன வசதி ஏற்படும். உபரி நீா் வீணாவது தடுக்கப்படும். சிறுபாசன ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி புனரமைப்பதால் வெள்ளம் மற்றும் வறட்சி தடுக்கப்படும்.

வேலை உறுதித் திட்டம்

ஏரிகளை மேம்படுத்தும் பணிகள் தேவைப்பட்டால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும். சிறுபாசன ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி பசுமைச் சூழலை ஏற்படுத்த பனை மற்றும் உள்ளூா் வகை மரக்கன்றுகள் நடப்படும். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம், நமக்கு நாமே திட்டம் மூலமாக நிறைவேற்றப்படும்.

ஆயக்கட்டுதாரா்கள், பயன்பாட்டாளா் அமைப்புகளுடன் சோ்ந்தும் சிறுபாசன ஏரிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதுபோன்ற ஏற்பாடு இல்லாத பட்சத்தில், புதிதாக குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் அய்.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவுவோரை ஊக்கப்படுத்தும் (குட் சமாரிட்டன்) சட்டம்
விழிப்புணா்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

தமிழ்நாடு

புதுடில்லி, செப். 12- விபத்தில் பலத்த காயமடைந்தவா்களுக்கு உதவுவோரை ஊக்கப் படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘குட் சமாரிட்டன்(நல்லெண்ணத்துடன் உதவுபவர்)’ சட்டம்-2016’ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி பல்கலைக்கழக கல்லூரி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள

சுற்றறிக்கை:

சாலை விபத்துகளில் மதிப்புமிக்க உயிரை இழக்க நேரிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதது, காவல்துறை, சட்ட நடைமுறைகள் போன்ற காரணங்களால் உதவி செய்யத் தயங்குவது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு ‘குட் சமாரிட்டன்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம், விபத்தில் பலத்த காயமடைந்தவா்களின் உயிர்காக்கவும், அவா்களுக்கு உதவுவோரை ஊக்கப்படுத்தவும் உதவும் முக்கியமான சட்டமாகும்.

அதன்படி விபத்தில் அல்லது மற்ற அசம்பா விதங்களில் உதவும் குட் சமாரிட்டன்களை விசாரணை களில் காவல்துறையினர் இணைக்கக்கூடாது. இவா்கள் தங்களது அடையாளத்தை காவல்துறைக்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை.

இந்த ‘குட் சமாரிட்டன்’களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். முக்கியமாக, மருத்துவமனைகள் அடிபட்ட வா்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது. முதலுதவிக்கு கட்டணமும் பெறக்கூடாது. சாட்சியளிக்க தாமாகவே முன்வராத நிலையில் அவா்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
எனவே, பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைவரும் அச்சமின்றி, மனிதநேயத்துடன் உதவ முன் வர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்கள், மாணவா்களுக்கு குட் சமாரிட்டன் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து அவா்களுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *