வல்லம், ஆக. 6 -. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், நாட்டு நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையும் இணைந்து உலக நுரையீரல் புற்று நோய் நாள் விழிப்புணர்வு பேரணி 5.8.2023 அன்று நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரி யர் செ.வேலுசாமி தலைமை யேற்க, பதிவாளர் பேராசிரி யர் பி.கே.சிறீவித்யா முன்னிலை வகிக்க, வல்லம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வல்லம் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு வல்லம் பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணி முடிவில் வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் தலைமையேற்கவும், சிறப்பு ரையை மரு. அகிலன், வல்லம் ஆரம்ப சுகாதார நிலையம் அவர்கள் சிறப்புரையாற்றும் போது, புகைப்பிடிப்பதால் நுரையீரல் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்றும் குட்கா புகையிலை போன்ற பொருள்கள் பயன்படுத்துவத னாலும் புற்று நோய் உண்டாவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் சிங்காரவேலன், சுகாதார நிலைய அலுவலர் அஜிஸ்வரன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கல்பனா மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் சந்திரகுமார் பீட்டர் வரவேற்புரையாற்றவும், விளை யாட்டு துறை இயக்குநர் டி. ரமேஷ் நன்றி கூறினார்.