மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க., ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உயர்கல்வி அமைச்சராக இருப்பவர் இந்தர் சிங் பர்மர். இவர் கடந்த 10.9.2024 அன்று போபாலில் உள்ள பர்கத் துல்லா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அம்மாநில ஆளுநர் மங்குபாய் சி படேல் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோரும் கலந்து கொண் டனர்.
இந்த விழாவில் அமைச்சர் இந்தர் சிங் பர்மர், இந்திய மாலுமி ஒருவர் தான் அமெரிக் காவைக் கண்டுபிடித்தார் என்றும், ராமர் சிலைகளை உருவாக்கிய இந்திய கட்டடக் கலைஞரின் உதவியுடன்தான் பெய்ஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது என்றும், ரிக்வேதத்தை எழுதியவர்கள் தான் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வரலாற்றாளர்கள் திட்டமிட்ட முறையில் இந்தியாவின் பலத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர் என்றும், “தவறான உண்மைகள் காரணமாக, இந்தியா வின் எதிர்மறையான பிம்பம் உலகிற்கு முன் வைக்கப்பட்டது” என்றும் உளறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “நமது முன்னோர்கள் அறிவு, திறமை மற்றும் திறன் ஆகிய அனைத்து அம்சங்களிலும் முன்னேறியவர்கள். நாம் தாழ்வு மனப்பான்மை யிலிருந்து விடுபட்டு, உயர்ந்த எண்ணங்களைத் தழுவி முன்னேற முயல வேண்டும்.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் என்பது இந்தியாவில் தேவையில்லாமல் கற்பிக்கப்படும் ஒரு பொய். இது இந்திய மாணவர்களுக்குப் பொருத்தமற்றது. இதைக் கற்பிப்பவர்கள் கொலம்பசுக்குப் பின் வந்தவர்கள் செய்த அட்டூழியங்கள், இயற்கையை வணங்குபவர்கள், சூரியனை வணங்குபவர்கள் என்று பழங்குடியின சமூகங்களை எப்படி அழித்தார்கள், படுகொலை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதையும் கற்பித்திருக்க வேண்டும்.
ஒரு இந்திய மாலுமி 8 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்குச் சென்று சான்டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். அவை இன்னும் அங்குள்ள அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு நூலகங்களில் பாது காக்கப்பட்டுள்ளன.
அவர் தான் மாயா, இன்கா இன மக்களுக்கு வேதமத வழிபாட்டைக் கற்றுக்கொடுத்தார். ஆகையால் தான் அவர்கள் சூரியனை வழிபட்டு மிகவும் சிறந்த இனமாக திகழ்ந்தனர்.
ஏறக்குறைய 1,200-1,300 ஆண்டுகளாக, புவியியலில் தவறான கருத்துகளின் அடிப் படையில் ஒரு குறிப்பிடத்தக்க பொய் உலகம் முழுவதும் நிலைத்திருக்கிறது. போலந்து வானியலாளர் கோபர்நிக்கஸின் கோட்பாடு சூரியன் நிலையானது. கலிலியோ சொன்னது சூரியன் நிலையானது மற்றும் பூமி உட்பட அனைத்து கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன. ஆனால், இது நமது பண்டைய நூல்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ரிக்வேதத்தை எழுதியவர்கள், சந்திரன் தனது தாய் கோளான பூமியைச் சுற்றி வருவதாகவும், பூமி அதன் பெற்றோரான சூரியனைச் சுற்றி வருவதாகவும் ஏற்ெகனவே குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, நமது முன்னோர்கள் ஏற்ெகனவே சூரியனை நிலையானதாகக் கருதினர். பூமி, சந்திரன் மற்றும் மற்ற அனைத்து கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன.’’ இவ்வாறு பேசியிருக்கிறார்.
வேதம் என்பது எழுதப்பட்டது என்பதே பொய்! எழுதாக் கிளவி என்பதுதான் வேதம். செவி வழியாக வந்தது என்று சொல்லும் போதே, அதன் நம்பகத் தன்மை கேள்விக் குறி யாகி விடவில்லையா?
சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று கதை விடும் கூட்டம், உருட்டல், புரட் டல்களில் கை தேர்ந்தது என்பதுதான் உண்மை.
பழம் பெருமைப் பேசுவது ஒரு வகையான திரிபு வேலையே!