சேத்பட் அ. நாகராசன் தான் பணியில் இணைந்து 38ஆம் ஆண்டு துவங்குவதையொட்டி இயக்க நிதியாக ரூ.3,800 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பொறியாளர் நெடுமாறன். (சென்னை 9.9.2024).
வி. வெங்கட்ராமனின் மைத்துனர் ஆரணி மு. தென்னரசு பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: கவிஞர் கலி. பூங்குன்றன். (சென்னை 9.9.2024).
செய்யாறு மாவட்ட தலைவர் அ. இளங்கோ, நகரத் தலைவர் தி.காமராஜ் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து செய்யாறில் கழக வட்டார மாநாடு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். (சென்னை, 9.9.2024)
நார்வே நாட்டில் இருந்து வருகை தந்த நவமகன் கேதீஸ் தான் எழுதிய ‘போக்காளி’ என்ற நாவலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: ஜேர்ச் மலரவன், கருப்பு பிரதிகள் பதிப்பகத்தை சேர்ந்த அமுதா. (சென்னை 10.9.2024)