அரியலூர், செப்.11- அரியலூர் மாவட்ட ப.க.சார்பில்தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பாக உரையாற்றினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் மாவட்ட இணைச்செயலாளர் ரத்தின ராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.
வெற்றி பெற்றவர்கள்
முதல் பரிசு ரூ. 3000 இரா.கலைவாணன் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு அரசு கலைக்கல்லூரி அரியலூர், இரண்டாம் பரிசு ரூ. 2000 பா.அரிகரன் இரண்டாம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி அரியலூர், மூன்றாம் பரிசு ரூ 1000 அ.அஸ்வினி பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்தனூர் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசினை அரியலூர் கோல்டன் மருத்துவமனை பேரா. தங்கவேலு, இரண்டாம் பரிசினை பொறியாளர் குழுமூர் இராமச்சந்திரன், மூன்றாவது பரிசினை அரியலூர் பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தராஜன் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சிக்கான இதர செலவினங்களை மாவட்டது. தலைவர் இரா.திலீபன் வழங்கினார்.