மண்ணச்சநல்லூர், செப்.11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசமைப்பு சட்டம் 51A(h) ஆகியவற்றை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெட்ரோல் பங்க் அருகில் 30-8-2024 அன்று மாலை 6 மணியளவில் ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமையில் சிறப்பாக நடந்தேறியது
நகரச் செயலாளர் க.பாலச் சந்திரன் வரவேற்பு உரையாற்றினார்
தொடக்கத்தில் புள்ளம்பாடி நகரச் செயலாளர் பொற்செழியன் இயக்கப் பாடல்களை இன்னிசை யுடன் பாடி மகிழ்வித்தார்.
கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட், மாவட்டத் தலைவர் தே.வால்டேர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்ட செயலாளர் ஆ.அங்க முத்து, துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன், மதியழகன், துறை யூர் மாவட்ட கழகத் தலைவர் ச.மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்
பின்னர் கழக சொற்பொழிவாளர் புவனகிரி யாழ் திலீபன் சிறப்புரை யாற்றினார்.
அவர் தம் பேச்சின் போது,
தமிழர்கள் எவ்வாறு ஆரிய கூட்டத்திலும் அடிமைப்பட்டு இருக் கிறார்கள் மக்கள் மூட நம்பிக்கையை ஒழித்து பகுத்தறிவோடு வாழ வேண்டும் பெண்களுக்கு சமூக உரிமை சொத்துரிமை ஆகியவற்றை வாங்கித் தந்த தந்தை பெரியாரை நன்றி உணர்வுடன் நினைத்து சுயமரியாதையுடன் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்ற கொள்கை வழி வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டார் இடையில் மக்கள் ரசிக்கும் வகையில் சில பாடல்களைப் பாடி திராவிட கொள்கைகளை மக்கள் மனதில் பதியும் வண்ணம் நல்லதொரு உரை யாற்றினர்.
இக்கூட்டத்தில் கழக காப்பாளர் பி.என்.ஆர்.அரங்கநாயகி மாவட்ட இளைஞரணிச் தலை வர் க.ஆசைத்தம்பி ஒன்றிய செயலாளர் பாச்சூர் இராசேந்திரன் தொழிலாளரின் தோழர் பாச்சூர் அசோகன் திருப்பைஞ்சீலி முரு கேசன் வாழ்மானப்பாளையம் கிராமத் தோழர்கள் பிச்சையா வெங்கடாசலம் பிச்சையா பன்னீர் செல்வம் பணிநிறைவு மின்வாரியத் தோழர் செல்வராசு மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் நகரத் தலைவர் மூ.முத்துசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.