11.9.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56 இன்ச் மார்பு, கடவுளுடன் நேரடியாக பேசுபவர் என்கிற பேச்சுக்கள் எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டன என அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிக்கவில்லையாம்! மாறாக குஜராத்தைச் சேர்ந்த சந்தன் என்ற இந்திய கடல் வணிகரைப் பின்தொடர்ந்தார் என்று மத்தியப் பிரதேச உயர்கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் இந்தர் சிங் பேச்சு.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, சமஸ்திபூரில் இருந்து ‘கார்யகர்த்தா சம்வத் யாத்திரை’ தொடங்கினார்.
உ.பி., இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களையும் இழக்கும், 2027இல் தோல்வியை சந்திக்கும்: அகிலேஷ் உறுதி.
தி டெலிகிராப்
நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலிஜியம் முறை, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் உயர் நீதித்துறைக்கு நியமிக்கப்படுவதை தடுக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா