திருச்சி, செப்.11- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருவரங்கத்தில் 10/9/2024 மாலை 7 மணிக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் முன்னிலையில் சிறப்பான முறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் பக்கத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றுவதும் மற்றும் திருவரங்கத்தை சுற்றி உள்ள 32 கொடிக்கம்பங்களில் கொடியேற்றி சிறப்பிக்கவும் அன்று மதியம் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வழக்குரைஞர்
எஸ்.ஹரிஹரன் எப்பொழுதும் போல் புலால் உணவு வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டோர் சா.கண்ணன், நகர தலைவர்
இரா.முருகன், நகர செயலாளர் பி.தேவா, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.மகாமணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் த.அண்ணாதுரை, திருவரங்க நகர துணைத் தலைவர் தா.ஜெயராஜன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆ.பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.