திருப்பத்தூர், செப்.11- திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருப்பத்தூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் கே.சி.எழிலரசன், மாவட்ட தலைவர் தலைமையிலும், பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் வரவேற்பிலும், சி.தமிழ்ச் செல்வன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், சி.எ.சிற்றரசன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித் தார்த்தன், வே.அன்பு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தின் நோக்கம் குறித்து பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் உரையாற்றினார்.
சி.தமிழ்ச்செல்வன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், வே.அன்பு மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர், வ.புரட்சி விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர், ஞானம் விடுதலை வாசகர் வட்டத் தலைவர், ஆகியோர்கள் தந்தை பெரியார் விழா ஏன்? கொண்டாட வேண்டும் தங்களின் பங்களிப்பு என்ன என்பதை குறித்து விளக்கமாக பேசினார்கள்.
இக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த கல்லூரி மாணவி காயத்ரி பங்கேற்று தந்தை பெரியாரின் சிந்தனைகளால் தனக்குள் ஏற்பட்ட தாக்கம் குறித்து பேசினார்.
தெருமுனைக் கூட்டங்கள்
கே.சி.எழிலரசன் மாவட்ட தலைவர் அவர்கள் தனது தலைமை உரையில்:
தந்தை பெரியார் அவர்களால் இங்கே 100% பேர் பயன் அடைந்த வர்கள். அவர் இல்லாவிட்டால் நாம் மானமும், சுயமரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. அவர் தன் சிந்தனைகளை பரப்பும் விதமாக அவர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் குறைந்தது 50 தெருமுனைக் கூட்டங் கள், கிராமங்கள் தோறும் கபடிப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், செப்டம்பர் 17இல் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்று , நகரில் வாகனப் பேரணி ஊர்வலம் நடத்தப்படும் என்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு அண்ணா சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர், ஊமை ஜெயராமன் தலைமை கழக அமைப்பாளர் சிறப்பு அழைப்பாளராக வந்து கருத்துரை வழங்கினர். அதில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இக்காலச் சூழலுக்கு தந்தை பெரியாரை கொண்டாடுவது மிக மிக அவசியம். அவரை கொண்டாடுவது என்பது அவர் தம் கொள்கையை, சிந்தனைகளை கொண்டாடுவது, இந்த பிறந்த நாளில் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உரையாற்றினார்கள்.
கூட்டத்தில், தோக்கியம் மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி பெருமாள் அவர்களின் மகன் பெ. சுந்தரம் அவர்கள் மறைவுக்கு மாவட்ட திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்து கொண்டது.
சமூகநீதி நாள் உறுதிமொழி
செப்டம்பர் 17, தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 146 இடங்களில் பெரியார் படங்களை வைத்து மாலை அணிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பது.
நகரில் தாரை தப்பட்டையுடன் தந்தை பெரியாரை படங்களுடன் ஊர்வலமாக செல்வது எனவும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டுச் செல்லும் விதமாக “பெரியார் பயிலகம்” இரவுப் பள்ளிகளை தொடங்குவது எனவும், பொது மக்களிடமும், மாணவர்களிடம் உள்ள மூடப் பழக்கங்களை ஒழிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் 50 இடங்களில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியுடன் தெருமுனைக் கூட்டங் கள் நடத்துவது, கிராமங்கள் தோறும் கபடிப் போட்டிகள், பெரியார் பேச்சுப் போட்டிகள் நடத்துவது எனவும், தந்தை பெரியார் பிறந்தநாளில் ஆண், பெண் சமத்துவத்தில் பெரியார் சிந்தனைகளில் பல முன்னெடுப்புகளை எடுத்து சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், சமையல றையில் சமத்துவத்தை உருவாக்கும் வகையில் ஆண்களுக்கு மட்டும் சமையலை கற்றுத் தரும் வகையில் மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் படிக்கும் காலங் களில் மற்ற பாடத் திட்டத்துடன் சமையலையும் ஒரு பாடமாக கொண்டு வந்து செய்முறை வகுப்பின் மூலம் மதிப்பெண் வழங்கி ஆண் மாணவர்களை சமையலை கற்றுக் கொள்ள வழி வகைச் செய்து, சமை யலறையில் சமத்துவத்தை உருவாக்கும் சூழலையும், சமையல் பெண்களுக்கு மட்டுமானது என்ற நிலையை மாற்றி இருபாலரும் சமைக்கும் மனப்பான்மை உருவாக்கும் வகையில் “ஆண்கள் சமையல் கற்கும்” திட்டத்தை உரு வாக்க வேண்டும்.
அதை போன்று பெண்களுக்கு பள்ளிகளில் தற்காப்புக் கலைகளை கற்றுத் தர வேண்டும் என்று திராவி டர் கழகம் சார்பில் தமிழ்நாடு அர சுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை முன் வைப்பது எனவும்,
தொழில் முனைவோருக்கு…
திராவிடர் கழகத்தில் பல பிரிவு கள் இருப்பது போன்று தொழில் முனைவோருக்கு என்று ஒரு பிரிவை உருவாக்கி, உலகம் முழுவதும் தொழில் முனைவோர்களை ஒருங் கிணைத்து புதியதாக தொழில் தொடங்கும் தோழர்களுக்கு, தமிழ் நாட்டின் தொழில் முனைவோருக்கு எந்த எந்த துறைகளில் வாய்ப்புகள் உள்ளது என்று அறிந்து கொள்ளும் வகையில் ஆலோசனைகள் வழங்கி,, தமிழ்நாட்டில் கல்வியில், அரசு துறை வேலை வாய்பில் சமத்துவத்தை காப்பது போன்று,தொழில் துறை யிலும் வடவர்களின் ஆதிக்கத்தை ஒழித்து தமிழர்களின் தொழில் துறையை பாதுகாத்துக் கொள்ள “திராவிட தொழில் முனைவோர் கழகம் ” ஒன்றை உருவாக்க வேண் டும் என்றும் இக்கூட்டத்தில் தீர் மானங்களாக கொண்டு வரப் பட்டது.
சந்தாக்கள்
தந்தை பெரியார் விழாவிற்கு கழகத் தோழர்கள் தாமரை மாவட்ட மகளிரணி – ரூ. 2000, கற்பக வள்ளி மாவட்ட மகளிர் பாசறை – ரூ.1000, பெருமாள்சாமி விடுதலை வாசகர் வட்டம் ரூ.2000, வெ.குமரவேல் விடுதலை வாசகர் வட்டம் ரூ. 1000, பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர் ரூ.500 ஆகியோர்கள் நிதி வழங்கினார்கள். வ.புரட்சி விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் ரூ.2000 ஒரு ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
வே.அன்பு மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் செப்டம்பர் 17 – தந்தை பெரியார் பிறந்த நாள் முன்னிட்டு தோழர்கள் அனை வருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் கே.கே.சி.கமலம்மாள் பெரியார் பெருந்தொண்டர்,
பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், கோ.திருப்பதி மாவட்ட ஆசிரியரணி தலைவர், இராஜேந்திரன் சோலையார்பேட்டை நகர அமைப்பாளர், மோகன் திராவிட தொழிலாரணி அமைப்பாளர், வெற்றி மாதனூர் ஒன்றியத் தலைவர், நாகராசன் கந்திலி ஒன்றியச் செயலாளர், வெங்கடேசன் மாதனூர் ஒன்றியச் செயலாளர், குமர வேல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தாமரை மகளிரணி, நித்தியானந்தம் இளைஞரணி, பெரியார் செல்வம், பச்சை முத்து தி.க., பிரபாகரன், ஆகி யோர்கள் பங்கேற்றனர். இறுதியில் ஏ. டி.ஜி.சித்தார்த்தன் நகர செயலாளர் நன்றி தெரிவித்தார்.