கந்தர்வகோட்டை, நவ. 17- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடு நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா நடைபெற்றது. மாணவர்கள் நேருவின் முகம் போன்று முகக்கவசம் அணிந்து உற்சாக மாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட “இல்லம் தேடிக் கல்வி” மய்ய ஒன் றிய ஒருங்கிணைப்பாளர் ரகம துல்லா குழந்தைகள் நாள் குறித் துப் பேசியதாவது
குழந்தைகள் நாள், இந்தியா முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மாமா நேரு எனகுழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படுகிறார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரி மைகள் குறித்து பேசியவர். உள்ள டங்கிய கல்வி முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார். அப்போதுதான் தேசம் முன்னேறும் என்று அவர் கூறினார்.
குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த இவரது தொலைநோக்குப் பார்வை என்னவென்றால், அவர் குழந்தைகளை இந்தியாவின் எதிர் காலம் என்றார். சமூகத்தில் அடித் தளம் என்றார். 1955ஆம் ஆண்டு இந்திய குழந்தைகள் ஃபிலிம் சொசைட்டியை நிறுவினார். இதன் மூலம் இந்திய குழந்தைகளை பிரிதிநிதித்துவப்படுத்த முடியும்.
குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள், அவர்கள் அனைவர் மீது கவனம் செலுத்தவேண்டும் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்க மாகும். “இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் சிற்பிகள்” என்று நேரு கூறினார். குழந்தைகள் நாளைய நாட்டை உருவாக்கு கிறார்கள் என்பதன் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் வகையில் இதை அவர் கூறினார் என்று பேசி னார்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
குழந்தைகள் நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை,சிந்தியா, செல்வி ஜாய், தனலெட்சுமி கவுரி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக ஆசிரியை நிவின் நன்றி கூறினார்.