புதுடில்லி, செப்.11 5 கூடுதல் நீதிபதி கள் நிரந்தர நீதிபதிகளாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதிகள் மூன்று பேரை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்குக் கூடுதல் நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராம கிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சக நீதிபதிகளான ஜெ.சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல மாவட்ட நீதிபதிகள் தகுதி நிலையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி வரும் எம்.ஜோதிராமன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் ஆர். பூர்ணிமா மற்றும் சென்னை தொழிலக தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.டி.மரியா கிளேட் ஆகிய மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்,சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.